
இப்படி மென்பொருளில் பழுது வந்தாலும் வன்பொருளில் பழுது வந்தாலும் சோதனை சோதனை தான். உதாரணத்துக்கு கடந்த இரண்டு வாரங்களாக மத்திய தரை,மத்திய கிழக்கு பகுதிகளில் அடுத்தடுத்து 8 கடலடி இணைய இணைப்பு கம்பிகள் வெட்டப்பட்டு போனது பலருக்கும் சாதாரண விபத்து நிகழ்வுகளாய் படவில்லை. நமக்கு அது ஒரு சாதாரண கேபிள் வெட்டாக இருக்கலாம். ஆனால் பல நாடுகளுக்கு அது கோடிக்கணக்கான பண இழப்பு.எப்படி அவை வெட்டப்பட்டு போயின? யாராவது வேண்டுமென்றே வெட்டினார்களா? அப்படியானால் அவர்களின் நோக்கம் என்ன? தொலைப்பேசியை ஒட்டு கேட்பது போல் இணையத்தை ஒட்டு கேட்க யாராவது விளைகின்றார்களாவென பல கேள்விகள் அங்கு.
முன்பெல்லாம் பக்கம் பக்கத்து நாடுகள் போட்டி பொறாமையில் சத்தமின்றி ஏவுகணைகளை ஏவி விட்டு விட்டு "நான் அவன் இல்லை" என்பார்கள்.இன்னும் கொஞ்சம் தைரியம் வந்ததும் ஆட்களை எல்லை தாண்டி ஊடுருவ விடுவார்கள்.இப்போது தொழில்நுட்பம் மாறுகின்றது. அதற்கேற்ப்பவே நாடுகளும். லித்துவேனியா. ரஷ்யாவை அடுத்த ஒரு குட்டி நாடு. இங்கு சகல அரசாங்க சமாச்சாரங்களும் கணிணி மற்றும் இணையம் வழியே தான் நடக்கின்றன. நாட்டு பொது தேர்தலே இணையம் வழிதான் நடத்துகிறார்களென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பக்கத்து நாடான ரஷ்யாவின் தொல்லை தாங்கவில்லை.சைபர் தாக்குதல் நடத்திக்கொண்டே யிருக்கின்றார்கள் என அந்நாடு குற்றம் சாட்டுகின்றது. இப்படி ஹைடெக் யுத்தம்
அமைதியாய் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
கணிணியுகத்திலும் யாரும் திருந்துவதாய் இல்லை. :)

கிருபானந்த வாரியாரின் "இராம காவியம்" மென்புத்தகம் Kirubaanantha Vaariyaar Ramayanam Tamil e-book Download. Right click and Save.Download