Thursday, February 21, 2008

கொஞ்சம் சுயபுராணம்


என்னைப் போன்ற சராசரி தமிழ் பேசுபவனுக்கு தெரிந்த சில சமாசாரங்களை, இன்னொரு சாமானிய தமிழனுக்கு சொல்லத் தான் இந்த வலைப்பதிவு இதுவரை ஓட்டப்பட்டு வருகின்றது. வழக்கமாய் வந்து கேள்விகளை கேட்டு, பின்னூட்டங்களை இட்டு உற்சாகப்படுத்தும் அநேக நண்பர்களுக்கு இடையே திடீரென சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆனந்த அதிர்ச்சி. பிரபல பத்திரிகையாளரும் வெகுஜன எழுத்தாளருமான அன்பர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் இவ்வலைப்பதிவை தனது புத்தம் புதிய இணைய தளத்தில்(www.sramakrishnan.com) அறிமுகப்படுத்தியதோடு (படம்) இங்கு பின்னூட்டமும் இட்டு சென்றிருக்கின்றார்.அவருக்கு என் நன்றிகள் பல. இப்போது அவர் தனது தமிழ் வலைதளத்திலும் பிரத்தியேக பத்திகள் அவ்வப்போது எழுதிவருகின்றார்.

இவ்வலைப்பதிவை படித்த பலரும் என்னிடம் கேட்கும் ஒரு கேள்வி "நீங்கள் பட்டுக்கோட்டை பிரபாகரா?".ஏனெனில் தமிழ் எழுத்துலகில் எல்லோரும் அறிந்த பிகேபி "பட்டுக்கோட்டை பிரபாகர்" அவர்கள் தாம். இங்கு எனது வலைப்பதிவின் பெயரும் பிகேபி என அமைந்ததால் அக்கேள்வி கேட்கப்படுவதுண்டு. ஆனால் உண்மையில் அவருக்கும் இந்த வலைப்பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் ஒர் மலை. நான் மடு.

"சும்மாவா சொன்னாங்க பெரியவுங்க" என்ற மென்புத்தகத்தை படித்த துளசி கோபால் அக்கா "நீங்கதானே பட்டாபி? இன்னிக்குத்தான் உங்க 'சும்மாவா சொன்னாங்க பெரியவுங்க' படிச்சேன். எல்லாம் சூப்பர். மிகவும் ரசித்தேன். அநேக புதிய தகவல்கள் கிடைத்தன.ஒன்று மட்டும் சொல்லிக்கவா? வடக்கே தலைவச்சுப் படுக்கும் பகுதி: பூமத்திய ரேகைக்கு எட்டு டிகிரியில் இந்தியா ஆரம்பம் அது வடதுருவத்துக்குப் பக்கமுன்னு தாத்தா சொல்றாரே.....
அது சரியான்னு சொல்லுங்களேன்."
-ன்னு கேட்டிருந்தார். ஐயோ அக்கா நான் பட்டாபியும் இல்லை அந்த தாத்தாவும் இல்லை. உங்கள் பாராட்டுகளெல்லாம் அந்த "பட்டாபி" தாத்தாவையே போய் சேரட்டும்.
மற்றபடி பூகோளத்தை பார்க்கும் போது வடதுருவம் தென்துருவம் இரண்டில் இந்தியா வடதுருவத்தின் பக்கமாய் உள்ளது அல்லவா அதை தான் அப்படி சொன்னாரோவென சந்தேகிக்கின்றேன்.

P.G.Sayee Prackash அவர்கள் "I really like and stunned the works of PKP. The pdf format of life history of Chaplin and Marx are really good to read and preserve to our life. Nanrigal pala" என சொல்லியிருந்தார். இப்படி பலரும் பாராட்டிய அவ்விரு மென்புத்தகங்களின் ஆசிரியருக்கே அப்பாராட்டுகள் போயடையட்டும்.

பின்னூட்டமிடும் அல்லது மின்னஞ்சலிடும் நண்பர்கள் உங்களின் பெயர் இங்கு இப்பதிவுகளில் இடம் பெற விருப்பமில்லையெனில் தயவு செய்து அதை உங்கள் பின்னூட்டத்தில் அல்லது மின்னஞ்சலில் தெரிவிக்க வேண்டுகின்றேன்.

இவ்வலைப்பதிவை வாசிப்பதில் பெரும்பாலானோர் மின்னஞ்சல் வழியே வாசிப்பதால் தான் பின்னூட்டங்களுக்கான பதில்களையும் பதிவுகளாகவே பதிக்கின்றேன்.மற்றபடி வேறு இரகசியம் ஒன்றுமில்லை. பின்னூட்டத்தின் வழி பேசப்படும் பல நல்ல விசயங்கள் கூட அனைவரையும் சென்றடைய வேண்டுமல்லவா?

இக்கால உலக அரசியல் நிகழ்வுகள் தமிழில் கவிதைகளாக மு.பொன்னம்பலம் "பொறியில் அகப்பட்ட தேசம்" சிறு மென் புத்தகமாக. Mu.Ponnambalam "Poriyil Agappatta Thesam" in Tamil kavithaikal pdf ebook Download. Right click and Save.Download