
இஸ்ரேல் நாடு இருக்கும் இடம் லாகவமாய் இல்லாத காரணத்தால் அந்நாட்டின் அடுத்த உளவு சாட்டிலைட்டான, 260 கிலோகிராம் எடைகளே கொண்ட TechSar இந்தியாவின் ஸ்ரிகரிகோட்டாவிலிருந்து செப்டம்பர் மாதத்தில் ஏவப்படுமாம். இஸ்ரேலின் Shavit எனப்படும் ராக்கெட் கடந்த 2004-ல் மத்திய தரைக்கடலில் விழுந்து தோல்வியில் முடிந்தது.இந்தியாவின் அடுத்தடுத்த வெற்றியாலும், இந்தியாவின் PSLV ராக்கெட் மேலுள்ள அதீத நம்பிக்கையாலும் அவர்கள் இந்தியாவின் உதவியை நாடியிருக்கிறார்களாம்.ஏதோ சில ராணுவ ஒப்பந்தங்கள் இருக்கலாம்.
இவ்வாறு சாட்டிலைட்களின் எடை சிறிதாகிக்கொண்டே வருவதால் சீக்கிரத்தில் Boeing 747 போன்ற சரக்கு விமானத்திலிருந்தோ அல்லது F-15 போன்ற போர் விமானத்தில் பறந்தவாறோ சேட்டிலைட்களை ஏவ முயன்று வருகின்றார்கள்.அது வெற்றிகரமாய் முடிந்தால் பெரிதாய் கவுண்டவுன்கள் எதுவும் இல்லாது சென்னையிலிருந்து டெல்லி போகும் வழியில் போகிற போக்கில் விமானத்தில் பறந்தவாறே நாலு சேட்டிலைட்கள் ஏவுவார்கள்.
(படம் - ஒரு மாடல் நானோசாட்)