Friday, August 24, 2007

புதுக் கணிணிகளுடன் வரும் குப்பைகள்

புதுசாய் ஒரு மடிக்கணிணி வாங்குகின்றீர்கள் என வைத்துக்கொள்வோம்.அது Sony Vaio வாக இருக்கட்டும் அல்லது ,Dell Inspiron ஆக இருக்கட்டும் அல்லது,HP Pavilion ஆக இருக்கட்டும் அல்லது Toshiba Satellite ஆக இருக்கட்டும், இல்லை அது ஒரு சாதாரண புது பிராண்டட் மேஜை கணிணியாகவே இருக்கட்டும். அனைத்து வகை புது கணிணிகளுடனும் தவறாமல் வருவது குப்பைகள் ஆமாம் குப்பைகள் தான். அதாவது அநேக Evaluation Software-கள்.

30 நாட்களுக்கப்புறம் இருக்கிற ஆன்டிவைரஸ் மென்பொருள் செத்துவிடும். அடிக்கடி அதை வாங்க சொல்லி நினைவூட்டி தொல்லைகள் வேறு. இது போல இன்னும் பிற மென்பொருள் குப்பைகள். ஏன் மைக்ரோசாப்டின் ஆபீஸ் மென்பொருளே இப்படித்தான் புது கணிணிகளோடு வரும்.
இக்குப்பைகளையெல்லாம் நீக்கி சுத்தம் செய்தால் தான் நமக்கு ஓர் இனிய அனுபவம் அந்த கணிணிவழி கிடைக்கும். ஓகே.இக்குப்பைகளை சுத்தம் செய்தல் எப்படி? ஒவ்வொன்றாய் உக்கார்ந்து தேடி நீக்க வேண்டிய அவசியமில்லை.இக் crap-களையெல்லாம் நீக்க இலவசமாய் கிடைக்கின்றது PC Decrapifier என்னும் மென்பொருள்.பெயருக்கேற்றார் போல் இந்த "வாக்கூம் கிளீனர்" அக்க்குப்பைகளையெல்லாம் தேடி தடவி சுத்தமாய் நீக்கிவிடுகின்றது.அப்புறமென்ன அக்கணிணி உங்களுக்கு இனிய நேரங்களை தருமென நம்பலாம்.

Product Home Page
http://www.pcdecrapifier.com/

List of Craps it can remove.
http://www.pcdecrapifier.com/removes