
Link to Saravanas Streetview
சரி நம் விஷயத்துக்கு வருவோம்.
இது போன்ற immersive எனப்படும் மூழ்கு படங்களை எடுக்க அமெரிக்க நகரங்களில் கூகிளின் வேன்கள் தலைக்கு மேல் விசேசித்த கேமராவோடு சுற்றி வருகின்றனவாம்.அப்படியான ஒரு வேனை கேமராவோடு படத்தில் காணலாம்.அது போலவே Windows Live Local-காரர்களும் தெருக்களை சுற்றி வருகின்றார்கள். இது போன்ற immersive வீடியோ தொழில்நுட்பத்தில் http://www.immersivemedia.com முன்ணணியில் இருப்பதுபோல தெரிகின்றது.


Link to msn`s version of this feature
http://preview.local.live.com/
பிரைவசி போச்சுடோய்யென சிலர் கத்த "அது மாதிரி" படங்களை நீக்கும் பணியிலும் கூகிள் ஈடுபட்டு வருகின்றது.
அமெரிக்காவில் நீங்கள் இருப்பவரானால் ஸ்டிரீட்வியூ போய் பரிச்சயமான இடங்களை ஒரு பார்வை விடுங்கள்.ஒருவேளை உங்களையோ அல்லது உங்கள் நண்பரையோ அல்லது உங்கள் காரையோ காணலாம்.