
இன்னொரு புறம் இந்திய ருபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கெதிரே பலமாகி கொண்டு வருவது இந்தியாவில் வசிக்கும் சுப்பனையும்.வெளிநாடு வாழ் குப்பனையும் வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.அதாவது சில மாதங்களுக்கு முன் வரை திருப்பூரிலிருந்து சுப்பன் 1 டாலர் டி சர்ட்டை ஏற்றுமதி செய்தால் அவனுக்கு 48 ரூபாய் கிடைத்தது.இப்போது 41 ரூபாய்தான் கிடைக்கின்றது.இது கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும் பெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
வெளி நாட்டில் பணிபுரியும் குப்பனின் கதையும் இதுவே.முன் 1 டாலர் சம்பளம் அதாவது 48 ரூபாய் கிடைத்தது.இப்போது 1 டாலர் சம்பளம் அதாவது 41 ரூபாய் தான் சம்பளம் கிடைக்கின்றது. எங்கிருந்தாலும்,எது நடந்தாலும் அடிபடுவது நாம் தான்.இது போன்ற சிக்கலை தடுக்க சீனா தன் கரன்சி மதிப்பை சிக்கென மாற்றாமல் ஒரே மதிப்பாய் வைத்திருக்கின்றார்கள் என யாரோ சொன்னார்கள்.அதை கண்டு அமெரிக்கா போன்ற நாடுகள் குதிக்கின்றனவாம்.ஏதோ என்னவோ 2050 கனவில் BRIC நாடுகள்.நமது இரண்டு பொருளாதார மேதைகளின் கணக்கும் என்னவோ?