Monday, May 8, 2006

லோகோ ரகசியம் - விப்ரோ



1945-ல் மகாராஷ்டிராவில் அமல்னெர் எனும் நகரில் சூரியகாந்தி எண்ணெய்,வனஸ்பதி மற்றும் சோப்பு உற்பத்தி செய்யும் நோக்கில் துவக்கப்பட்டதுதான் Western India Products Limited.அஸிம் ப்ரீம்ஜி(Azim Premji)-வால் 1979-ல் -Wipro வாகி இன்று அது ஒரு ஹைடெக் கார்ப்பொரேட்டாகி நிற்கிறது.உலகெங்கும் 30 அலுவலக வளாகங்களுடன் 50,100 பேர் இந்நிறுவனத்துக்காக வேலைசெய்கிறார்கள்.இதன் வானவில்பூ ('Rainbow Flower') லோகோ 'Applying Thought' என்ற வாசகத்துடன் 1998-ல் உருவாக்கப்பட்டது. இதன் லோகோவிலுள்ள பிரகாசம் integrity-ஐயும், புயலுக்கு பின் வரும் வானவில் human values-ஐயும், மலரின் மத்திய பாகம் நுண் தொழில் நுட்ப innovative solutions-ஐயும் மற்றும் வானவில்லின் எளிமை,அபூர்வம் value for money -யையும் உணர்த்துகிறதாம்.மலர் பெண்ணியமாய் மென்மையாயினும் 'Applying Thought' என ஆண்மைத்தனமாய் மென் பொருள் தீர்வு வாடிக்கையாளருக்கு வழங்குகிறோம் என்கிறார்கள்.மேலே W என காண்பது விப்ரோவின் பழைய லோகோ.

டெயில்பீஸ்:1966-ல் தனது 21-வது வயதில் அஸிம் ப்ரீம்ஜி விப்ரோவின் தலைமையை ஏற்றார்.
இன்று விப்ரோதான் உலகின் முதல் PCMM Level 5 கம்பெனி என்பது ஒரு ஆச்சர்யமான உண்மை.

வகை:லோகோ ரகசியம்