Monday, May 1, 2006

துபாயும் தீபாவளி பட்டாசும்

இப்போதெல்லாம் எப்படி என தெரியவில்லை.2003 தீபாவளிவாக்கில் பர்-துபாயில் தங்கியிருந்தபோது நம் இந்தியர்கள் எப்படி தீபாவளியை துபாயில் பயங்கரமாய் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர் என்பதை பார்க்க முடிந்தது.இந்தியாவில் இருந்து தீபாவளி கொண்டாடுவது போன்றே ஒரு பிரம்மை.அடுத்த நாள் அரேபிய நாளிதழ் ஒன்றில் ஒரு அரேபியர் கடிதம் எழுதியிருந்தார்."தீபாவளி பட்டாசு கொண்டாட்டம் ஒரு பப்ளிக் நியூசன்ஸ் (nuisance).அதை தடை செய்ய வேண்டும்" என்று.அடுத்த நாளே நம்மவர் ஒருவர் பதில் கடிதம் எழுதியிருந்தார்."விடிய விடிய வெடிகுண்டு சத்தங்களும் ,சூசைட்பாம் சத்தங்களும் ஆம்புலன்ஸ் சத்தங்களும் கேட்பதைவிட இந்தமாதிரி குழந்தைகள் பட்டாசு வெடித்து கொண்டாடும் சத்தம் கேட்பது எவ்வளவோ மேல்" என்று.