கன்னியாகுமரி--திருநெல்வேலி-தூத்துக்குடி பகுதி வாழ்மக்கள் பயன்படுத்தும் பிரத்தியேக தமிழ்(?) வார்த்தைகளின் தொகுப்பு இங்கே
படக்கு - பட்டாசு
அய்யம் - கெட்டது (எகா.அய்யே அது அய்ய பழம்)
தல்லுதல் - பொடியாக்குதல்
சமுட்டுதல் - மிதித்தல்
ஏசுதல்-திட்டுதல்
பைதா - சக்கரம்
பிளசர்-கார்
குசினி - சமையலறை-ஆங்கில வார்த்தை Cuisine-யிலிருந்து வந்ததோ?.
அரங்குவீடு-சேமிப்பு அறை
கக்கூஸ் - கழிப்பறை
மட்டுப்பாவு வீடு - மாடி வீடு
அளி-பெரிய ஜன்னல் (அளிபோட்ட வீடு)
வீட்டு நடை-வீட்டு படி (நடைல உக்காரு)
தலவாணி-தலையணை
செட்டி-சோபா செட்-ஆங்கில வார்த்தை set-யிலிருந்து வந்ததோ?.
பத்தாயம்-அரிசி சேமித்துவைக்குமிடம்
துடைப்பம்-விளக்குமாறு
காய்ச்சல்-ஜூரம்
கடுதாசி,காயிதம்-கடிதம்
சோறு-சாதம்
கொக்கூஸ் - அச்சுமுறுக்கு
சக்கப் பழம் - பலாப்பழம்
சின்ன உள்ளி-சின்ன வெங்காயம்
பல்லாரி உள்ளி-பெரிய வெங்காயம்
சீனி-சக்கரை
சக்கரை-வெல்லம்
கருப்பட்டி-பனைவெல்லம்
மண்ணெண்ணெய்-கிருஸ்னாயில்-கெரசின் (kerosene)ஆயில்-சீமெயெண்ணை
வாத்தியார்,வாத்திச்சி- ஆசிரியர்,ஆசிரியை
வள்ளம்-சிறுபடகு
குட்டுவம்,குத்துப்போணி-பெரிய பாத்திரம்
சருவம்-சிறிய பாத்திரம்
சொளவு-அரிசியை வீசி சுத்தம் செய்ய உதவும் பொருள்
முடுக்கு-சந்து
விலக்கு-ஊரின்எல்லை
புட்டான் - பட்டாம்பூச்சி
பக்கி-வண்ணத்துப்பூச்சி
நாய்க்குடை-காளான்
ஓந்தான் - ஓணான்
பாச்சா-கரப்பான்பூச்சி
கொட்டு-ட்ரம்ஸ்
உளக்கு-அரிசி அளவை
சென்ட்-நில அளவை
நிக்கர்-அரைகால்சட்டை
சாப்பு-சட்டை பை
சாரம்-லுங்கி
கைலேஞ்சி-கர்சீப்பு
சென்னி-கன்னம் அல்லது தலை
சுண்டு- உதடு
சாணி-சாணம்
சாளை,வாளை,நெய்மீன்,துண்டுமீன்,துப்புவாளை,வெளமீன்,இறா,பாறைமீன்,நெத்திலி-மீன்வகைகள்
தெங்கு-தென்னைமரம்
பொத்தை-சிறுமலை,பாறை
சானல்-சிறுஆறு-ஆங்கில வார்த்தை Channel-யிலிருந்து வந்ததோ?.
பலசரக்குகடை-டிபார்ட்மென்டல் ஸ்டோர்
ஆக்கர்கடை-காயலான் கடை
சுள்ளி-காய்ந்த மரக்கிளை துண்டுகள்
கோயில்கொடை-கோயில் திருவிழா
சோலி-வேலை
வண்ணம்-குண்டு,பருத்த (அவள் என்னா வண்ணம்)
குண்டு-குழி (குப்பை குண்டு)
கட்டை-குள்ளம்
நெட்டை-உயரம்
ஈக்கல்-தென்னைஓலை நார்
ஓலைப்பிறை-தென்னைஓலையால் வேய்ந்த கூரை
தொந்தி-தொப்பை
அப்டேட்:
இன்னும் சில நினைவுகள்
எப்பாவு-செல்லமாய் எப்பா
எம்மாவு-செல்லமாய் எம்மா
மக்கா-செல்லமாய் மக்களே
மேனே-செல்லமாய் மகனே
மேளே-செல்லமாய் மகளே
மயினி-மச்சினி(மச்சினன்)-கொழுந்தி,கொழுந்தியாள்-மாப்பிளையின் தங்கை-"மதினி"யின் மரூஉ-மதினி-அத்த பொண்ணு, மாமன் பொண்ணு, மனைவியின் அக்கா
செமத்தியா-செமத்தியா அடிவாங்கினான் (செம்மையாய் -யின் மருவோ?)
மசுகுட்டி பூச்சி,மைக்குட்டி பூச்சி-கம்பளி பூச்சி
ஏல-சிறு பையனை அழைத்தல்
ஏட்டி-சிறு பெண்ணை அழைத்தல்
இன்னேருங்க-மனைவி கணவணை அழைத்தல்
ஆட்டும்-சரியென ஆமோதித்தல்- ஆகட்டும்
மரு-மச்சம்
மூஞ்சி-முகம்-மூஞ்சியும் மொகரக்கட்டையும்
முழித்தல்-விழித்தல்
வெள்ளனே-காலைநேரம்
அந்தி-சாயங்காலம்
உச்சி-உச்சை-மதியம்
நிசி-இரவு
வெளக்கு-பல் வெளக்கு-வெள்ளையாக்கோ?
கருக்கு-இளம்-இருளாகும் மாலை பொழுது,இளம் தேங்காய்
பயினி-பனை பதனீர்
எளனி-இளம் தேங்காய் நீர்
சொக்காய்-சட்டை
அதிரசம்,மோதகம்,பனியாரம்,கொழுக்கட்டை,முந்திரிகொத்து-பலகாரவகைகள்
சாரா-பூரான்
ஊத்து-பீப்பீ-இசைக்குழல்
மேனி-உடம்பு
பெடனி,பெடரி = பின்கழுத்து
குறுக்கு = பின் இடுப்பு (இடுப்போட முதுகுப்பக்கம்)
கொவுருதல்-குளிர்தல் ஈரமாதல்
மாய்ச்சல்-வருத்தம்
தெகையும்-பத்தும்-பற்றும்-போதும்
ஓர்மை-நினைவு-நியாபகம்-(ஓர்மை இருக்கா?)
வகை:தமிழ்நாடு