
மைனர்களிடம் சீண்டுவது இங்கு பெருங்குற்றம். பள்ளிப் பேருந்துகளை நடுச்சாலையில் நிறுத்தும் போது அதில் மின்னும் சிவப்பு ஒளியைக்கண்டு மொத்த சாலைகளும் ஸ்தம்பித்து நின்று சிறார்களுக்கு சாலையைக் கடக்க வழிவிடும். சிறுவர்களை அடித்தாலோ அல்லது திட்டி அது அழுதாலோ Child Abuse என யார் வேண்டுமானாலும் 911 அழைக்கலாம். எல்லாம் டீனேஜ் முடியும் வரை தான். பள்ளி முடிந்து கல்லூரி போனதும் பொத்தி பொத்தி வளர்த்ததெல்லாம் பூ...ம். கோபாலுக்கு இதுவெல்லாம் தெரியாதிருந்ததா? அல்லது தெரிந்திருந்தும் இது ஒரு வெர்சுவல் உலகம் தானே எப்போது வேண்டுமானாலும் Undo செய்துகொள்ளலாம் என நினைத்திருந்தானா? அல்லது அமெரிக்காவில் இதெல்லாம் சகஜமென ஆழம் தெரியாமல் காலையிட்டு பார்த்தானா தெரியவில்லை. இணையத்தின் இன்றைய மெகா பரிமாணம் நம் ஊரில் வருமுன்னேயே இது குறித்துச் சொன்ன "காதலர் தினம்” கூடவா இவன் பார்த்ததில்லை?
இனி சாலையில் போவோறெல்லாரும் இவனுக்கு தேவர்களாகவும் தேவதைகளாகவும் தெரிவார்கள் .இவன் மட்டும் தனக்கு படுபாவியாகத் தெரிவான். http://locator.thevision2020.com ல் Sex Offenders அல்லது Child Predators வரிசையில் இவன் பெயரையும் போட்டாலும் போட்டு விடுவார்கள். உருப்படியாய் எதாவது செய்கின்ற நேரத்தில் சும்மா வம்புக்கு சாட் செய்து வாழ்க்கையை தொலைத்துக் கொண்டான். பாவம் அந்த கோபால்.
![]() ஓடுகின்ற கால்கள் ஓய்வெடுக்கும் போது நீ எடுத்துக்கொண்ட பயணம் முடிந்திருக்க வேண்டும்! வாழ்ந்த நாட்களை திரும்பிப் பார்க்கும் போது உன் பெயரை சிலர் உச்சரிக்க வேண்டும்! கோபுரங்களின் அழகை அஸ்திவாரங்கள் தாங்குவது போல் நீ பிறந்ததின் பயனை ஊரறியச் செய் - யாரோ |

Download