
மைக்ரோசாப்டின் விண்டோஸ், ஆப்பிளின் மேகிண்டாஷ், இலவச லினக்ஸ் என முப்பெரும் கணிணிநடை பாதைகள் இருந்தாலும் சீக்கிரமே ஒன்று மட்டுமே நிலைத்திருக்கும் காலம் வந்துவிடும் போலிருக்கின்றது. குறைந்த விலையில் ($199) வெளியாகும் நெட்புக்குகள், அதிவேக இணைய இணைப்புகள், அதனால் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வரும் மேக கம்ப்யூட்டிங் (Cloud computing) முறைமை மைக்ரோசாப்டின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. கூகிள் கொண்டு வரவிருக்கும்(?) ஜிடிரைவ் இன்னொரு கண்டம்.

அது வந்துவிட்டால் External ஹார்ட் டிரைவுகள், CD, DVD மற்றும் USB Flash டிரைவுகளின் மார்க்கெட் படுத்து விடலாம். எல்லா கோப்புகளையுமே நாம் இணைய ஜிடிரைவ் மையத்தில் சேமித்து வைத்துக் கொள்ளலாமே.பிறகு எங்கிருந்து வேண்டுமானாலும் அவற்றை எடுத்துக் கொள்ளலாமே.
கணிணி உதவியின்றி நேரடி இண்டர்நெட் இணைப்பு வசதியோடு வரும் இன்றைய HDTV-யில் இரட்டைசொடுக்கி உங்கள் ஜிடிரைவில் நீங்கள் சேமித்துவைத்திருக்கும் மூவியை பார்க்கலாம்.அதிவேக இணைய இணைப்பால் இன்றைக்கு இது எல்லாமே சாத்தியம்.

சாமானியர்களுக்கு இத்தனை சக்திகொண்ட வன்பொருள்களும் மென்பொருள்களும் எதற்கு? இணையம் மேயவும் சில கோப்புகளை கோர்க்கவும் சாதாரண இலவச லினக்சே போதுமானது என்பதால் பத்துவருடங்கள் முன்னோக்கிப் பார்த்தால் விண்டோஸ் மற்றும் மேகிண்டாஷின் மார்கெட்ஷேர் காணாமல் போயிருக்கலாம்.
REALbasic என்றொரு மென்பொட்டலம். புரோகிராமிங் மொழியான விசுவல் பேசிக் போன்றே இயங்குகின்றது. ஆனால் இதன் விசேசம் இதனால் உங்கள் விண்டோஸ் கணிணியில் உருவாக்கப்படும் ஒரு பயன்பாட்டை அப்படியே மேகிண்டாசிலும் லினக்சிலும் ஓட விடலாம். அதாவது இது Cross-compiler வசதியைக் கொண்டுள்ளது
PureBasic-ம் இதே சக்தி கொண்டிருப்பதாக சொல்கின்றார்கள். ஒரு பிளாட்பார்மில் எழுதி பல பிளாட்பார்ம்களில் ஓடவிட இதொரு நல்ல வழி.
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ அவரை நினைத்துக்கொள்வாய்!
நீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோ அவரை நினைத்துக்கொள்வாய்!
|

சாண்டில்யன் ”நிலமங்கை" புதினம் இங்கே தமிழில் மென் புத்தகமாக. Chandilyan Nilamangai Novel in Tamil pdf ebook Download. Right click and Save.
Download