
என் கணிணி வேகமாக பூட்டாகிவர நான் பயன்படுத்தும் பழங்கால டெக்னிக் ஹைபர்னேசன்.(Hibernation). வெண்பனி பொழிந்து எங்கும் குளிர் நிறைந்து கிடக்கும் இக்குளிர்காலத்தில் மனிதர் நாம் Fireplace-யை நாடுகிறோம்.அப்பாவி மிருகங்கள் என்ன செய்யுமாம்.

கணிணியிலும் இந்த ஹைபர்னேசனை Biomimicry செய்துவிட்டார்கள். எப்படி?
நான் விண்டோசை வேகமாக கொண்டுவருவதற்காக கணிணியை Shutdown செய்யாமல் Hibernate செய்வதுண்டு. நாம் hibernate செய்யும் போது அப்போது திறக்கப்பட்டிருக்கும் நம் பயன்பாடுகள், ஓடிக்கொண்டிருக்கும் நம் மென்பொருள்கள் எல்லாம் மூடப்படாமல் அப்படியே உறைந்து நம் கணிணியில் ஒரு கோப்பில் சேமிக்கப்படும். அதனால் மீண்டும் உங்கள் கணிணியை நீங்கள் தொடக்கும் போது மிக வேகமாக திறந்து ஏற்கனவே முன்பு நீங்கள் திறந்துவைத்திருந்த உங்கள் பயன்பாடுகளையும், ஓடிக்கொண்டிருந்த மென்பொருள்களையும் மீண்டும் கொண்டு வந்து தொடரும்.Shutdown செய்யாமல் ஹைபர்னேட் செய்யும் போது அப்போது உங்கள் கணிணியின் நினைவகத்தில் ஓடிக்கொண்டிருந்த எல்லா சமாச்சாரமும் hiberfil.sys எனும் கோப்பில் உறைந்து சேமிக்கப்படுவதால் இது சாத்தியமாகின்றது. உபுண்டுவில் இதை .hibernate.img என்பார்களாம்.
மனிதரின் ஹைபர்னேட்டாகிப் போனது யார் என கேட்டு எனக்கு ரிப் வேன் விங்கிளை (Rip Van Winkle) நினைவுபடுத்தினான் கோபால்.
![]() ஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும். |

க.மு.நடராஜன் “உடைமை ஊருக்கே” இங்கே தமிழில் மென் புத்தகமாக. Ka.Mu.Natarajan "Udaimai Uurukee" Tamil pdf ebook Download. Right click and Save.
Download