
எங்கோ படித்தேன். அமெரிக்காவில் இப்போதைக்கு சூடாக விற்பனையாவது கைத்துப்பாக்கிகளும் பாதுகாப்பு பெட்டகங்களுமாம். புதிய அரசு வந்ததும் கைஆயுதங்களுக்கு தடைவிதிக்கப்படலாம் என்பதாலும் மேலும் பொருளாதாரம் போகும் போக்கில் தற்காப்பு குறித்த கவலையும் மக்களிடையே ஏற்ப்பட்டுள்ளதாலும் இந்த நிலை ஏற்ப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்க மண் முழுவதும் ஆங்காங்கே பழைய நெருக்கடிகளின் போது தாத்தா பாட்டிகளால் தோண்டி புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் டாலர் கத்தைகளின் இருப்பிடம் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு செய்தியாவதுண்டு. இப்போது அது இன்னொரு தலைமுறையின் முறை. 1933-ல் அதிபர் ரூஸ்வெல்ட்(FDR) எல்லா அமெரிக்கர்களிடமிருந்தும் இருந்த Gold Coin, Gold Bullion, மற்றும் Gold Certificates-களை வலுக்கட்டாயாமாக பிடுங்கி வைத்துக்கொண்டது நினைவிருக்கலாம். அதற்கு பதிலாக கொஞ்சம் டாலர்களை கொடுத்தாராம். இதனால் நிறைய தங்கங்கள் அச்சமயத்தில் ரகசியமாய் மண்ணில் புதைக்கப்பட்டன. இப்போதும் அரிசி டப்பாக்குள் போட்டு வைத்திருந்த நகைகளையும் ஏதோ டிடெக்டர் பயன்படுத்தி கொள்ளையர்கள் கண்டுபிடித்து விடுகின்றார்களாம். இதனால் Sentry Safe-கள் சிலருக்கும் Ziploc bag-கள் பலருக்கும் உதவலாம். Backyard-ல் அடக்கம். இந்த கால திவால் வங்கிகளுக்கு இந்தமாதிரியான கிளாசிக் தீர்வுகள் எவ்வளவோ பரவாயில்லை என தோன்றலாம்.
கணிணியிலும் ரகசிய கோப்புகள், முக்கிய கோப்புகள் என இன்றைக்கு நம் வீட்டு கணிணிகளில் "மறைத்தல்" தவிர்க்க முடியாதனவாகிவிட்டன. பிறர்கண்ணிலோ அல்லது நம் வீட்டு குழந்தைகள் கண்ணிலோ அது பட்டு எதேச்சையாக அழிக்கப்பட்டு விடக்கூடாது பாருங்கள். இப்படி உங்கள் கணிணியில் இருக்கும் ரகசிய முக்கிய கோப்புகளையும் ஃபோல்டர்களையும் பிறர்கண்ணில் படாமல் சேர்த்துவைக்க System Vault என்ற இந்த சிறு இலவச மென்பொருள் உதவுகின்றது. குறிப்பிட்ட கடவுசொல்கொடுத்தால் மட்டுமே அந்த போல்டர் உங்கள் கண்ணுக்கு தெரியும். திறந்து பார்க்கலாம். பிற நேரங்களில் மறைந்தே இருக்கும்.
உங்களுடையது உங்களுடையதேயாகும். அதை Sentry Safe-ல் இட்டோ அல்லது System Vault -ல் இட்டோ பாதுகாப்பது நம் கடமை. ஆனால்
ஒரு எச்சரிக்கை தப்பித்தவறியும் Sentry Safe-ஐ புதைத்த இடத்தையும் System Vault-ன் பாஸ்வேர்டையும் மறந்துவிடாதீங்க.
Download System Vault
http://www.computer-realm.net/software/systemvault/
உதவும் கரங்கள் ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது. - அன்னை தெரஸா.
|

உமா பாலகுமார் புதினம் "உயிர் தொட்ட உறவே!" இங்கே தமிழில் மென் புத்தகமாக. Uma Balakumar Uyir Thotta Urave Novel in Tamil pdf ebook Download. Right click and Save.
Download