
TNO-க்கு வருவோம். மைக்ரோசாப்டின் விண்டோஸ் செர்வர் செயலியை ஐரோப்பிய நாடுகளின் அதிமுக்கிய ரகசிய கணிணிகளில் பயன்படுத்த மாட்டார்கள். அது போலத்தான் சில அரபுநாடுகளும். முற்றிலும் மூடப்பட்ட நிரல் மூலம் கொண்ட ஒரு செயலிக்குள் அதாவது விண்டோசுக்குள் எதாவது ஒரு ரகசிய சுரங்கப்பாதை அமெரிக்காவுக்கு இருக்குமோ என்ற கவலைதான் அதற்கு காரணம். பாருங்கள் உலகின் நம்பர் ஒன் மைக்ரோசாப்டை கூட அவர்கள் நம்புவதில்லை. திறந்த நிரல் மூலம் கொண்ட லினக்ஸ் தான் அவர்கள் தெரிவு. Trust no one. கலியுகத்தில் யாரையும் நம்பக்கூடாதாம்.
பல்வேறு பேங்க் அக்கவுண்டு கணக்குகளையும் ஒரே திரையில் இழுத்து வந்து காட்ட பல மென்பொருள்களும், இணையதளங்களும் இருக்கின்றன.யாரையும் நம்பியதில்லை.உங்கள் பாஸ்வேர்டுகளை பத்திரமாக ஸ்டோர் செய்து வைக்கவென தனியாக வரும் குட்டியூண்டு புரோகிராம்களையும் நான் நம்புகிறதில்லை. நமது பாஸ்வேர்டுகளை அது அதை டெவலப்செய்தவர்களுக்கு ஈமெயில் செய்துகொண்டிருக்கலாம் யாருக்கு தெரியும்? அமேசான் S3-யிலோ அல்லது JungleDisk-கிலோ நீங்கள் அப்லோடு செய்துவைத்திருக்கும் உங்கள் ரகசிய கோப்புகள் உண்மையிலேயே அவை யாரும் ஆக்செஸ் செய்யமுடியாத அளவுக்கு பாதுகாப்பானவையா?. உறுதியாகச் சொல்லமுடியாதே. Again Trust no one.
கடந்த பதிவில் ஜிமெயில் பேக்கப் மென்பொருள் பற்றி எழுதியிருந்தேன். அதிலும் உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுசொல்கொடுத்தால்தான் அதுவால் உங்கள் ஜிமெயிலை பேக்கப்செய்ய இயலும்.ஆனால் அது விசுவாசமாய் அதை உருவாக்கிய டெவலப்பருக்கே உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுசொல்லை கொண்டுபோய் கொடுக்குமாவென்றால் தெரியாது. அது ஓப்பன் சோர்ஸ் இல்லாததால் அதை கணிப்பது மிகவும் கடினம். நமது நண்பர் "மாஸ்டர்" சுட்டிகாட்டியதால் இங்கு இதை தெரிவித்தேன்.அவர் போன்ற நாலும்தெரிந்த நண்பர்கள் இவ்வலைப்பூவுக்கு வந்து செலல், தங்கள் கருத்துக்களை சொலல் எனக்கெல்லாம் மிகவும் பெருமை. எளிதாய் இருக்கின்றதேவென்றுதான் அம்மென்பொருளை முன்கொணர்ந்தேன். ஒரு எச்சரிக்கையையும் செய்திருக்கலாம்.
Trust no one என நாமெல்லாரும் கெம்பீரமாய்ச் சொன்னாலும் சில விசயங்களில் நாம் சிலரை அல்லது சிலவற்றை நம்பித்தான் ஆகவேண்டியிருக்கின்றது. வாழ்க்கையே நம்பிக்கையில் தானே ஓடுகின்றது. கவிஞர் வைரமுத்துவின் "நம்பிக்கை" சின்னத்திரைப்பாடல் என்னோட ஃபேவரைட்.
![]() கற்பு என்பதும் நம்பிக்கை முயற்சி என்பதும் நம்பிக்கை நாம் மூச்சு விடுவதும் நம்பிக்கை -கவிஞர் வைரமுத்து |
