
இஸ்லாமிய மத நம்பிக்கைகளின் படி இந்த யுகத்தின் முடிவு நாள் நெருங்குவதை "மேற்கே உதிக்கும் சூரியனை" அடையாளமாக வைத்து கண்டுகொள்ளலாம் என்பார்கள்.
"மேற்கிலிருந்து சூரியன் உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அவ்வாறு அது மேற்கிலிருந்து உதயமாகும்போது அதைப் பார்த்துவிட்டு மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக இறைநம்பிக்கை கொள்வார்கள்." என்று ஒரு வாக்கியம் இருக்கின்றது. இப்படி எழுத்தின்படியேயாக நிஜ சூரியன் மேற்கே இருந்து உதித்து வருவது என்பது சாத்தியமா என்பது பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அவ்வாறாக சூரியன் மேற்கே உதிக்க வேண்டுமானால் பூமி தன் சுழலும் திசையை மாற்றி எதிர்புறமாக சுற்ற வேண்டும். ஆனால் அதற்கான சாத்தியங்கள் மிகமிகக் குறைவு. அதுவே இன்னொரு யூகத்தின் படி அது தன் புலத்தை தலைகீழாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக நம்பப்படுகின்றது. இதனால் வட தென் துருவங்கள் இடம்மாறி சூரியன் நமக்கு மேற்கே உதிப்பதாய் தோன்றும் எனவும் சிலர் கருத்து கூறுகின்றனர். ஒரு சில ஆய்வுகள் பூமியின் வட்டப்பாதையை கூர்ந்து நோக்கும் போது இச் சம்பவம் 2012 முதல் 2016 க்குள் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றன.ஒரு காந்தத்தின் எதிர்புலத்தைக் கண்ட இன்னொரு காந்தத்தின் எதிர்புலமானது வெட்கப்பட்டு சுழன்று நகர்வது போல ஒரு மென்மையான தலைகீழ் சுழற்சியாய் இது இருக்கும் என நம்பப்படுகின்றது. இதையேத் தான் நாஸ்ரடாமஸ் தாத்தா "Great shift on Earth"என சொல்கின்றாராம்.
இது இப்படியிருக்க இஸ்லாமிய வேர்களைக்கொண்ட ஒரு எளிய மனிதர் மேற்கே பலம்பொருந்திய நாடு ஒன்றுக்கு அதிபராகும் வாய்ப்பு இப்பொழுது கிட்டியிருகின்றது. மேற்கே இப்படியான ஒரு நபர் உதிக்கப்போவதைத்தான் அவ்வாக்கியம் குறிக்கின்றது என இன்னொரு சாரார் இதற்கு விளக்கம் கொடுக்க முயல்கின்றார்கள். அதாவது அந்த தீர்க்கதரிசனம் லிட்டரலாக நிறைவேறாமல் இது போன்ற ஒரு அரசியல் சம்பவமாகக் கூட அது நிறைவேறலாம் என்பது அவர்கள் வியாக்கியானம். போதாக்குறைக்கு அவரின் சின்னமும் Rising Sun-னாக இருப்பது சரியான கோயின்சிடன்ஸ்.
தினமும் நடக்கும் அசாதாரண செய்திகளை பார்க்கும் போதும் கேட்கும் போதும் இன்றைய உலக சூழலில் ஒரு Great shift அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உலகுக்கு அவசியம் என்றே தோன்றுகின்றது.ஆனால் அதற்காக பூமியே தன் திசைகளை மாற்றிக்கொள்ளுமா என்பது தெரியாது.
அதுவெல்லாம் இருக்கட்டும்.அப்படியானால் அந்த மனிதனைப்போலவே பேசும் அதிசயப் பிராணி ஒன்றும் உலகத்தில் தோன்றும் எனவும் சொல்லப்பட்டுள்ளதே என கேட்கின்றீர்களா? அது தான் மனிதனைப்போலவே பேச ரோபாட்டுகள் வந்துவிட்டனவே.
மரியாதைக்கு விலை கிடையாது. ஆனால் அது அநேகரை விலைக்கு வாங்கும் -மாண்டேகு
|

இராமலிங்க அடிகள் வரலாறு இங்கே தமிழில் மென் புத்தகமாக. History of Thiru Arutprakaasa Vallalar in Tamil pdf ebook Download. Right click and Save.
Download