
முழு மின்சாரக் கார்களை இன்னும் ஏனோ ஆராய்ச்சிக் கட்டுரைகளில் மட்டுமே பார்க்கமுடிகின்றது. ஷோரூமில் என்றைக்கு பார்க்கப்போகின்றோமோ? சிக்காகோவிலிருந்து நியூயார்க்கு தரைவழி செல்லும் போது குறைந்தது மூன்று முறையாவது பெட்ரோல் டாங்கை நிரப்பவேண்டும்.இதுவே மின்சாரக்கார் எனில் ஐந்து முறை வழியில் காரை நிறுத்தி கார் பேட்டரியை சார்ஜ்செய்ய வேண்டும். ஒரு முறை சார்ஜ் செய்ய அரை மணிநேரம் என எடுத்துக்கொண்டாலும் இரண்டரைமணிநேரம் பயணத்தில் வேஸ்ட். இதுவே பெட்ரோல் காரானால் நிமிடத்தில் பில்அப் செய்துகொண்டு போய்கொண்டே இருக்கலாம். இந்த சிக்கலை போக்க Better Place எனும் நிறுவனம் தானியங்கி "பேட்டரி மாற்றுமிடங்களை" அங்காங்கே நிறுவும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் படி நூறு மைல்கள் நீங்கள் காரோட்டியவுடன் வழியில் வரும் அடுத்த "Battery switching station"-ல் போய் நீங்கள் எளிதாக உங்கள் வாகனத்தின் மின்கலத்தை மாற்றிகொள்ளலாம்.எல்லாமே தானியங்கி.கார் வாஷ் நிலையங்கள் போலவே நீங்கள் காரைவிட்டு இறங்கத் தேவையில்லை.அதுவே உங்கள் காரின் பேட்டரியை மாற்றித் தந்துவிடும்.இதனால் பேட்டரியை சார்ஜ் செய்யும் தொல்லை இல்லை.விலையும் மலிவு.சுற்று சூழலும் சுத்தமாகும் என்பது அவர்களின் கணக்கு.
ஏற்கனவே இஸ்ரேல் மற்றும் டென்மார்க்கில் இதுமாதிரியான Electric Recharge Grid-கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.இந்த வரிசையில் ஆஸ்திரேலியாவும் சமீபத்தில் இணைந்துள்ளது. (அமெரிக்காவில் இன்னும் வரவில்லை. ) பெட்ரோலுக்கு மாற்றாக பார்க்கப்படும் இந்த பார்வை சற்று சுவாரஸ்யமாகவே இருக்கின்றது. எனினும் ஆயிலை மட்டுமே நம்பி வாழும் பல நாடுகளுக்கு இது நற்செய்தியில்லாததால் பல அரசியல் இடையூறுகளை இது கடக்கவேண்டி வரும்.
![]() ஊக்கு விற்கும் ஆள் கூடத் தேக்கு விற்பான்!” -கவிஞர் வாலி |
