
இரண்டாயிரத்து எட்டில், நமது ஐபோன் அறிமுக பதிவில் “கையடக்க இந்த ஐபோன் பலருக்கும் ஒரு கியூட் கேட்ஜெட். இதுவே சற்று பெரிதாக சிறு புத்தக வடிவில் கீபோர்டு டைப்ப ரொம்ப கஷ்டப்படாத வகையில் ஒரு கேட்ஜெட் வந்தால் நன்றாயிருக்கும் என்பது பலரின் அவா. அதாவது சற்று பெரிய தட்டையான ஐபோன். ஆப்பிள் நிறுவனம் ரகசியமாய் அதற்கான புரோட்டோடைப்பில் ஈடுபட்டிருப்பது போல் தெரிகின்றது. ஐடேப்ளட் (iTablet) என்றோ அல்லது வேறெதாவது பெயரிலோ இந்த வருட இறுதிக்குள் அது சந்தைக்கு வரலாம்.” என குறிப்பிட்டிருந்தேன். இப்போது இரண்டு வருடம் கழித்து ஐபேட் எனும் பெயரில் அதை வெளியிட்டிருக்கின்றார்கள். ஸ்டீவ் ஜாப்சின் இன்னொரு மைல் கல். ஆப்பிள் காட்டில் மீண்டும் மழை பொழியலாம்.

ஐபேட் SDK வெளியிடப்பட்டிருந்தாலும் அனைத்து ஐபோன் பயன்பாடுகளும் இதில் வேலைசெய்யும் என்பது கூடுதல் மகிழ்ச்சி. ஐபோனில் தமிழ் யூனிக்கோடு எழுத்துருக்கள் உடைந்து உடைந்து தெரிகின்றன என முன்பு தெரிவித்திருந்தேன். அதை ஆப்பிள் இன்னும் சரிசெய்தது போல தெரியவில்லை. ஆனாலும் நமது மலேசியா வாழ் நண்பர்கள், கல்லையும் செல்லாக்குபவர்கள், செல்லினம் (Sellinam) எனும் ஒரு இலவச பயன்பாடை வெளியிட்டு, அதன் வழி தமிழை ஐபோனில் அழகாக்கி கொடுத்திருக்கின்றார்கள். நீங்கள் செல்லினம் எனும் இந்த ஐபோன் மென்பொருளை இறக்கம் செய்து நிறுவி அதன் வழி தமிழை சுலபமாக பார்க்கலாம்.(படம்) பிடித்தமான தமிழ் RSS Feed-களையும் சேகரித்து போகும் போக்கில் படிக்கலாம். http://sellinam.com குழுவுக்கு என் நன்றிகளும் வாழ்த்துதல்களும்.
![]() சில நம்மை பின்னோக்கி எடுத்துச்செல்லும். அவற்றை நினைவுகள் என்போம். சில நம்மை முன்போக்கி எடுத்துச்செல்லும். அவற்றைக் கனவுகள் என்போம். |
