"ஐபோனில் அழகு தமிழ்" என்ற நம்முடைய முந்தைய பதிவை படித்த நண்பர்கள் பலரும் பரவசப்பட்டிருக்கிறார்கள். பின்னே என்ன, பிறவிக்குருடனுக்கு திடீரென கண் கிடைத்தமாதிரி இருக்காதா என்ன. அந்த ஆச்சரியத்தில் நண்பர் எம்லின் என்பவர் இன்னொரு இலவச ஐபோன் பயன்பாடையும் அறிமுகப்படுத்திச் சென்றார். பின்னூட்டப்பகுதியை இப்படி பலருக்கும் பயனுள்ளதாக மாற்றும் மனிதர்களும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள். Newshunt எனும் இந்த பயன்பாடு, தமிழ் மட்டுமல்லாது இன்ன பிற இந்திய மொழிகளையும் அழகாக காட்டுகின்றது. இதில் தினமலர் முதல் மலையாள மனோரமா தொடங்கி மாத்ருபூமி, ஈநாடு வழி, ஆந்திர பிரபா, லோக் சத்தா, டைனிக் நவஜோதி என பல மொழி நாளிதழ்களும் இந்த வரிசையில் நீள்கின்றது. இருபது இந்திய நாளிதழ்கள் இருக்கின்றன. நீங்களும் பயன்படுத்தலாம். தெலுகு, மலையாளம், கர்நாடகா, வட நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தலாம். மகிழ்ந்து போவார்கள். நமக்கு தினமலர் பிளாஷ் நியூஸ் முதல் வாரமலர் துணுக்குமூட்டை வரை படிக்க முடிகின்றது. நன்றி Emlin.
செல்லினத்தில் நமது வலைப்பதிவை RSS feed-ஆக இணைக்க முடியவில்லை, என்னமோ எரர் சொல்கின்றது என்றார்கள். Please use this url. நன்றாக வேலைசெய்கின்றது. படங்கள் மட்டும் தெரிவதில்லை.
http://feeds.feedburner.com/pkp
இன்னொரு மருத்துவர் ஐயா கூட நமது வலைப்பதிவை தொடர்ந்து படிப்பதாக அறிந்தேன். கொல்லப்பட்டறையில் இன்னொரு ஈ. மிக்க மகிழ்ச்சி. இந்த எழுத்துரு பிரச்சனைக்கெல்லாம் ஒரு தீர்வாக தமிழ் பக்கங்களை படங்களாக காண்பித்தால் என்னவென கேட்டிருந்தார். பழைய கால டிரிக். சமீபத்தில் கூட இனிய நண்பர் டெக்ஷங்கர் (முன்னாள் தமிழ்நெஞ்சம் - ஏன் பெயரை மாற்றிக்கொண்டார் என அவரைக் கேட்டால் ஒரு சோகக் கதை கிடைக்கும்) இந்த டிரிக்கை (உதாரணம்) பயன்படுத்தினார். ஆனால் கூகிள் பாட்கள் (Bots) ஏமாந்து போகுமே. Search engine-களால் அந்த இமேஜில் என்ன தகவல் இருக்கிறதுவென தெரிந்து கொள்ள முடியாதே. காலை வெட்டுவதற்கு பதிலாய் செருப்பைவெட்ட முயன்றுகொண்டிருக்கின்றார்கள். டாக்டர் அய்யா! கொஞ்ச நாள் கூட பொறுப்போம். சீக்கிரத்தில் வெற்றி பெறுவோம்.
கிரிக்கெட் ஜூரம் தொடங்குகின்றது. இலவசமாய் ஆன்லைனில் பார்க்க tvnsports.com வழிசெய்திருக்கின்றார்கள். தேவையானால் போய் பார்க்கலாம்.
Cricket- India vs. South Africa, from February 6th FREE on TVNSPORTS.com ( 2 Tests 3 ODIS) http://www.tvnsports.com/members/signup.php
கிரிக்கெட்டில் கேட்ச் இருக்கும். இவர்கள் இலவசமாய் வழங்குவதில் எதாவது கேச் உண்டா தெரியாது.
தொடந்து தரமான தொழில்நுட்பத் தகவல்களை இனிய தமிழில் சளைக்காமல் எழுதிவரும் நண்பர் tvs50-யை இங்கு நமது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி. பெரும்பாலானோருக்கு இவர் ஏற்கனவே அறிமுகம் என்றாலும் தெரியாத ஒரு சிலருக்கு உதவியாக இருக்கலாம். அவருக்கு என் வாழ்த்துக்கள்.
http://tvs50.blogspot.com
சமீபத்தில் எனக்கு வந்த ஒரு காமெடி பின்னூட்டம்
“this is absolute copy.Pkp is copying lot of contents from other site and posting as if he creates and makes money.”
இது உண்மையாக இருக்காதாவென நினைத்துக்கொண்டேன். காப்பி/பேஸ்ட் செய்து காசு பண்ண எதாவது வழி இருந்தால் தயவுசெய்து அனானிகள் தெரிவிக்கவும்.
![]() வெற்றியின் அடையாளம் துணிச்சல்! துணிந்தவர் தோற்றதில்லை!! தயங்கியவர் வென்றதில்லை!! |
