
போட்டி போட்டுக்கொண்டு Dow-வை முந்தி தங்கம் போய்க்கொண்டிருக்கின்றது. காகித பணத்திலுள்ள நம்பிக்கை கம்மியாகும் போதெல்லாம் மக்கள் இப்படி தங்கத்தின் மேல் பாரத்தை போடுவது வழக்கம். இக்காலங்களில் காகிதப்பணத்தின் மேல் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை ரொம்பவே அற்றுப்போயிருக்கின்றது. இப்படித்தான் பொருளாதாரத்தில் மெத்தப்படித்த நம் பிரதமருக்கும் தோன்றியிருக்கும் போலும். அவரே அதை பிரதிபலிப்பது போல சைலண்டாக 200 டன் தங்கத்தை IMF இடம் இருந்து வாங்கச்சொல்லிவிட்டார். இந்திய ரெசர்வ் வங்கி அதை அவுன்சுக்கு $1,045 கொடுத்து வாங்கியிருக்கின்றது. அதாவது ஏறக்குறைய $6.7 பில்லியன் டாலர் தாள்கள் ஒரே நாளில் தங்கமாக மாற்றப்பட்டிருக்கின்றது. பொதுவாக ரெசர்வ் வங்கிகள் தங்கத்தை விற்பதுதான் வழக்கம். இப்போது பல ரெசர்வ் வங்கிகளும் தங்கத்தை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி குவித்துக் கொண்டுள்ளனர். எல்லாம் டாலர் போன்ற காகித பணத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பது தான் காரணம். இதனால் சராசரி ஜனம் தங்கம் வாங்க தவிக்கவேண்டியுள்ளது. பெரிதும் அவதிக்குள்ளாவது நம்மூர் ஜனங்கள் தான். வேண்டினாலும் வேண்டும் சுத்த தங்கமல்லோ நமக்கு வேண்டும். 1931-ல் பிரிட்டனும் 1971-ல் அமெரிக்காவும் Gold Standard-ஐ விட்டு விலக பொன்பாளங்களுக்கு நல்லக்காலம் துவங்கியது. கரன்சிகளோ காற்றில் பறக்கத் துவங்கின. ஒரு கணக்கீடுபடி இந்தியா 757.7 டன் தங்கபாளங்கள் வைத்திருப்பதாக சொல்கின்றார்கள். எங்கே ஒளித்து வைத்திருக்கின்றார்கள் என தெரியவில்லை.மும்பையிலாயிருக்கும்.
நியூயார்க் மன்காட்டனின் வால்ஸ்டிரீட் பக்கமாய் பலமுறை நடந்து போயிருக்கின்றேன். ஆனால் 5,000 டன் தங்க கட்டிகள் மேலே நான் நடந்திருக்கிறேன் என்பதை நான் உணர்ந்ததில்லை. அங்கே சப்வேக்கும் கீழே 30 அடியில் நிலத்தடி பங்கர்அறைகளில் இந்த 540,000 தங்க கட்டிகளை பாதுகாத்து வைத்துள்ளார்களாம் சுற்றிலும் பாறைகள் வெளி காற்று, நீர் உள்ளே புகா அறைகள். இங்கிருக்கும் தங்கம் முழுவதும் அமெரிக்காவுக்கு சொந்தமானதல்ல. உலகின் பல்வேறு நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் சொந்தமானது. பத்திரமாக இருக்கட்டுமேனு இங்கே வைத்துவைத்திருக்கின்றார்கள். என்ன நம்பிக்கையிலோ? தெரியவில்லை உலகின் 25% தங்கம் இங்கு தான் உள்ளதாம். இதில் வெறும் 5 சதவீதம் தான் அமெரிக்க அரசுக்கு சொந்தமானது. அமெரிக்காவின் மொத்த 8,133.5 டன் தங்க இருப்பில் மிச்ச 4,603 டன் தங்கம் இருக்கும் இடம் கென்டகியிலுள்ள Fort Knox.(மேலே படம் பிசியான சென்ட்ரல் லண்டன் Old Lady of Threadneedle Street-ன் நிலத்தடியேயுள்ள Bank of England-ன் தங்க அறை. நீங்கள் பார்ப்பது வெறும் 15,000 தங்க கட்டிகள் அதாவது 210 டன் தங்கம் தான். அங்கே மொத்தம் 4,600 டன் தங்கம் உள்ளதாம்)
“தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அது தரத்திலே குறைவதுண்டோ”-ன்னு ஒரு பாட்டு உண்டே அது உண்மையா பொய்யாவென கேட்டான் கோபால். ஏண்டா அப்படி கேட்கிறேனு கேட்டா பொய்களை கவிதையாக்காதீர்னு கவிஞர்களுக்கு வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளாரேன்னான். அவனு(ரு)க்கு ரொம்ப குறும்புதான்.
![]() உன் தொப்பியிடமும் யோசனை கேள் |
