
மாயன் காலண்டர் மொத்தம் ஐந்து சுழற்சிகளைக் கொண்டதாம். ஒரு சுழற்சிக்கு 5125 ஆண்டுகள் . அதாவது மொத்தம் ஏறத்தாழ 26000 ஆண்டுகள். ஒவ்வொரு 5125 ஆண்டுகள் முடியும் போதும் பூமியில் மிகப்பெரியதொரு மாற்றம் அலல்து அழிவு உண்டாகும் என்பது ஐதீகம். இப்போது நாமிருக்கும் இந்த ஐந்தாவதான மற்றும் இறுதியான சுழற்சி ஆகஸ்ட் 11 கிமு 3114-ல் தொடங்கியதாகவும் வரும் 2012 டிசம்பரில் இந்த 5125 ஆண்டுகள் சுழற்சி நிறைவுபெறப்போகின்றதாகவும் சொல்கின்றார்கள்.இதனால் என்னவெல்லாம் நடக்க போகின்றது என்பது பற்றி சூடாக பேசப்பட்டு வருகின்றது. இதற்கெல்லாம் 1987-லேயே 25-ஆண்டுகள் கவுண்டவுன் தொடக்கிவைத்தவர் Law of Time நிறுவனர் José Argüelles. இவரின் கூற்று படி 2012 ஆண்டில் மக்களெல்லாரும் தங்கள் உணர்வுகளில் முக்திபெற்று ஒரு உயர்ந்த நிலையை அடைவார்கள். எளிய வாழ்க்கை, சூரிய சக்தி தொழில்நுட்பம், தோட்டங்கள் நடுதல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருப்பர். அவர்கள் தங்களுக்குள்ளே டெலிபதி முறையில் பேசிக்கொள்வார்கள். இப்படியான ஆன்மாவில் உயர்நிலை அடையாத மனிதர்களையெல்லாம் ”வெள்ளிக்கப்பல்கள்” வந்து கொண்டு போய்விடும் எனக் கூறியிருக்கின்றார்.
2012 படத்தோட முன்னோட்டத்தை பார்த்தாலேயே பேசாமல் வெள்ளிக்கப்பலில் போய்விட்டால் தேவலாம் போலிருக்கின்றது.(மேலே படம் ஒரு 2012 பட போஸ்டர். 2016-ல் ஒலிம்பிக் நடக்கவிருக்கும் பிரேசில் ரியோடிஜெனிரோவில் இருக்கும் மிகப் பெரிய யேசு நாதர் சிலை அழிவில் கீழே விழும் காட்சி)
![]() ஈசல் மழைக்கு வந்து மடியறாப்பல. அந்தப் பொழுதை அடிச்சுக் கோச்சுக் கிட்டுப் போக்கனுமா? அடிச்சு யாரைத் திருத்த முடியும்? -முள்முடியில் தி.ஜானகிராமன் |
