
எதிலும் பளா பளாவை புகுத்துவதில் மைக்ரோசாப்டை விட்டால் இப்போதைக்கு வேறு யாரும் இல்லை என்பது உண்மையே. சாதாரணமாய் நாம் கூகிளில் தேடுவதை Silverlight 1.0 RC, AJAX, Live Search, Live ID,Live Spaces வகையறாவெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பிரியாணி பண்ணி அதற்கு "டாஃபிட்டி" என பெயரிட்டிருக்கின்றார்கள். Tafiti என்றால் ஆப்ரிக்க Swahili மொழியில் "ஆய்வு செய்" அதாவது "do research" என்று அர்த்தமாம்.சும்மா சொல்லக் கூடாது. இதில் தேடல் அனுபவம் கலக்கலாய் பளாபளாவென இருக்கின்றது . வெறும் search காலம் முடிஞ்சுபோச்சு இனி research காலமென சொல்லாமல் சொல்லியிருக்கின்றார்கள். shelf,stack-ன்னு சில வசதிகளும் இந்த பீட்டாவில் கொடுத்திருக்கின்றார்கள்.முடிந்தால் Silverlight-யை நிறுவி இவ்வெப்பக்கம் போய் பாருங்கள்."chennai" என தேடலில் கொடுத்தேன் அது கொடுத்த சென்னை பற்றிய பக்கங்கள் தான் நீங்கள் கீழே பார்ப்பது.படத்தை கிளிக்கி பெரிது பண்ணி பாருங்கள்.
Home Page
http://www.tafiti.comOriginal tafiti
http://www.tafiti.com/Original/default.aspxசென்னை பற்றிய படங்கள் தேடியபோது....

சென்னை பற்றிய செய்திகள் தேடியபோது....

சென்னை பற்றிய தகவல்கள் செடி வடிவில்


தமிழில் ஜோக்ஸ் மென்புத்தகம்."Tamil Jokes" ebook for Download. Right click and Save.
http://static.scribd.com/docs/1iil7qy0m2jak.pdf