Wednesday, September 12, 2007

முருகவேல் ஒரு வெற்றிவேல்

ரோல்மாடல் ஒரு சமூகத்துக்கு எவ்வளவு முக்கியமென சமீபத்தில் பரவலாய் உணர தொடங்கியிருக்கின்றார்கள். சரியான ரோல்மாடல் இல்லாத காரணத்தால் உலகின் சில பகுதிகளில் இளைஞர்களுக்கு கேடிகளும், தாதாக்களுமே ரோல்மாடலாவதால் சீக்கிரமே அவர்கள் சீரழிய சாத்தியம் அதிகமாகின்றதாம்.நம்மூர் இதில் பரவாயில்லை.மலர்ந்து வரும் இளைஞர்களுக்கு மேலும் மேலும் நம்பிக்கையூட்ட பல நல்ல ரோல்மாடல்கள்.

முருகவேல் ஜானகிராமன் - நம் சென்னை பல்கலைகழகத்திலிருந்து கணிணியியலில் முதுகலை கற்று விட்டு சிங்கப்பூர், அமெரிக்காவென சாதாரண கணிணி வல்லுனராய் வேலை பார்க்கப்போனார்.ஏனோ இணையத்தில் ஆர்வம் மேலிட SysIndia.com எனும் இணைய விவாத தளத்தை தொடங்கினார்.
அதில் matrimony எனும் சொல் சூடான டாப்பிக்காகவே முருகவேலுக்கு ஒரு ஜோதி தோன்றியது.
நம்மூரின் மிகப் பெரிய மங்கள காரியமான இந்த கல்யாண விஷயத்துக்காக ஒரு தனித் தளம் தொடங்கினால் என்ன?
1997-ல் TamilMatrimony.com பிறந்தது.பிறந்ததிலிருந்தே அது மிகப்பெரிய சக்ஸஸ்.தி நகரில் 300 சதுர அடியில் 3 பேரோடு தொடங்கினார்கள்.இன்று அது 350 பேரோடு BharatMatrimony.com,HindiMatrimony.com என 14 இணைய தளங்களோடு மிகப்பெரிய நிறுவனமாக சென்னை அண்ணாசாலையில்.
மேலும் 22 அலுவலகங்கள் இந்தியா முழுதும்.ஏறக்குறைய 75 லட்சம் அங்கத்தினர்கள்.இதுவரை சுமார் 7 லட்சம் திருமணங்கள்.அதாவது சராசரியாய் தினம் 30 முதல் 50 திருமணங்கள் இதன் வழி நடத்தப்படுகின்றதாம்.

முப்பத்திநான்கே வயதான முருகவேல் நம்பிக்கையாய் சொல்கின்றார் "செய்யும் செயலை முழுமனதாய் விரும்பி செய்தால் தோல்வி என்பதே சாத்தியமில்லை"

பின்குறிப்பு: முருகவேல் TamilMatrimony.com தொடங்கியபோது அவர் பாச்சிலராயிருந்தார். இரண்டு வருடம் கழித்து தனது மனைவியையும் அவர் இணையம் வழியே தான் தேடிபிடித்தாராம்.நானும் அப்படியே நன்றி சொல்லிக்க நல்ல தருணம் இது.



Chennai anniversary 368 Tamil ebook download.
சென்னை வயது 368 மென்புத்தகம் உங்கள் இறக்கத்துக்காக.Right click and Save.
http://static.scribd.com/docs/5wzxcm2pgrp4u.pdf