அப்படி இப்படியாய் இந்த வலைப்பதிவை (http://pkp.blogspot.com) துவக்கி இன்று மூன்று ஆண்டுகள் ஆயாயிற்று.பெரிதும் மகிழ்ச்சி.
"தமிழ் கலாசுகிறது" என்கிற தலைப்பில் எனது முதல் பதிவை மார்ச் 09 2004 -ல் எழுத துவக்கியிருந்தேன்.அந்த பதிவில் "ஆரோக்கியமான இந்த போக்கு கடைசிவரை தொடரவேண்டும் என கடவுளை பிரார்தித்து கொள்வோம்.(குடுமிபிடி சண்டை போட யாராவது வந்துவிடபோகிறார்கள்)" என்று முடித்திருந்தேன்.தமிழ் வலைப்பதிவு உலகில் வாழ்ந்தோருக்கு தெரியும். அநேக ஏற்ற இறக்கங்கள்.வந்தோர் போனோர்கள்.உற்சாகமும் நம்பிக்கையும் வித்திடப்பட்ட அதே வேளையில் விடமும் அழுக்கும் ஆங்காங்கே.பல்வகை முகங்கள்.எங்கு சென்றிடினும் அதானே உலகு.அதுதான் அழகுமோ?
"ப்ரியமுடன் கேபி" வலைப்பதிவை பொறுத்தவரை கடந்த சில காலமாக ஓரளவு ரெகுலராக வலைப்பதியமுடிந்தது.தட்டி கொடுத்த நண்பர்கள் சிலர்.
சத்தமின்றி தள்ளி நின்று பார்த்து விட்டு செல்வோர் அநேகர்.இருசாராரும் பெரிதாய் உற்சாகமூட்டுகின்றனர்,ஊக்கமளிக்கின்றனர்.
கடந்த வருடத்தில் நாளிதழ் தினமலர் தன்னால் முடிந்த அளவு தமிழ் வலைப்பூக்கள் பொது மக்களை சென்றடைய முயற்சி எடுத்தது.சன் டிவி ஒரு சிறப்பு பார்வை இட்டது.மற்ற படி தமிழ் வலைப்பூக்கள் பொது மக்களை சென்றடைய யார் யார் முயன்றார்கள் தெரியவில்லை.அதுவும் சரி தான்.சரக்கிருந்தால் எவர் உதவியும் தேவை இல்லையோ?.
தமிழ் வலைப்பூக்கள் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் இங்கே.
http://pkp.blogspot.com/2006/11/blog-post_21.html
இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டும்.
