Tuesday, March 6, 2007

32-டிலிருந்து 64-க்கு

கணிணியை சார்ந்த உலகம் சைக்கிள் போலவாம்.மென்பொருள் ஆனாலும் சரி வன்பொருளானாலும் சரி ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்.
இல்லையேல் விழுந்து விடுவோம்.மென்துறை மெகா மாற்றங்கள் போல வன்துறையிலும் சமீபகாலமாக உருவாகி வரும் ஒரு மாற்றம் 64 பிட் கம்ப்யூட்டிங்.
அந்தகால Dos-8 bit ஆகவும் அப்புறம் வந்த Windows For Workgroup-16 bit ஆகவும் அதன்பின் வந்த Windows95 முதலான பெரும்பாலான ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் 32 bit ஆகவும் வெளியாகின.இப்போது அடுத்தபடியாக 64 பிட் காலம்.
Windows XP மற்றும் Windows Vista-வில் 32 -பிட் பதிப்போடு 64 பிட் பதிப்பும் ஒரே DVD-ல் தனித் தனியாக வருகின்றன.(லினக்ஸ் கூட தான்).

அதி வேகமாக கணிணித்தல்,மிக அதிக கட்டுப்பாடுள்ள பாதுகாப்பு,குறைவான அளவே கிராஷ் ஆகும் சாத்தியம் அப்படி இப்படி என நன்மைகளை வரிசையிடுகிறார்கள்.
கூடவே பெரும்பாலான பழைய அப்ளிகேஷன்களை இந்த 64பிட் செயலியில் இயக்கலாம் என்பது ஒரு நல்ல செய்தி.ஆனால் முழு 64பிட் சுகத்தையும் அனுபவிக்க "64பிட் அப்ளிக்கேசன்"களை பயன்படுத்துதல் நலம்.
நீங்களும் 64பிட் செயலியை பயன்படுத்தி பார்க்கலாம்.உங்கள் கணிணி 64 பிட் சப்போர்ட் செய்யவேண்டும்.அதற்காக ஏதோ புதிதாக கணிணி வாங்க வேண்டும் என நினைக்க வேண்டாம்.
ஆச்சர்யம் என்னவென்றால் நம்மில் அநேகரின் கம்யூட்டர்கள் ஏற்கனவே இந்த 64 பிட்டை சப்போர்ட் செய்கின்றதாம்.

இங்கே ஒரு இலவச மென்பொருள் உங்கள் கணிணி 64 பிட் சப்போர்ட் செய்கிறதா என நொடியில் கணித்து காட்டும்.

Product Page
http://www.grc.com/securable.htm

Direct Download
http://www.grc.com/files/securable.exe