Friday, February 23, 2007

புல்லும் ஆயுதம்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று நம்மூரில் ஓர் பேச்சுண்டு. ஆரம்பகாலத்தில் கூகிள் மேப்பும் சரி அப்புறமாய் காசு கொடுத்து Keyhole- யிடம் இருந்து வாங்கிய கூகிள் எர்த்தும் சரி இலவசமாகவே கூகிளால் இணைய சமுதாயத்துக்கு வழங்கப்பட்டு வருகின்றது.(உச்ச பதிப்புகள் தவிர).

இலவசமாய் இப்படி மேப்பும், பூமியும் வழங்கினால் கூகிளுக்கு காசு எப்படி வரும்,அடிக்கடி யோசித்ததுண்டு.
இங்கே பாருங்கள் புல்லையும் ஆயுதமாக்கும் கூகிளின் இன்னோவேசன் வித்தைகள்.கூகிள் மேப்பில் ஓட்டல் தேடினால் அருகாமையில் அமைந்திருக்கும் ஓட்டல்களை கூகிள் மேப் விளம்பரங்கள் காட்டுகின்றன.

அதுபோல கூகிள் எர்த்தையும் வைத்து இப்போதெல்லாம் விளம்பரங்கள் தயாரிக்கப்படுகின்றன.
Saturn கார் நிறுவனத்தின் முயற்சியை இங்கு காணலாம்.

http://www.saturn.com/saturn/detour/googleearth/index.jsp

விளம்பர Video

இன்னோவேசனாலேயே கலக்கும்/பிழைக்கும் கூகிளுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்.

போகிற போக்கில் Chief Information Officers எல்லாம் Chief Innovation Officers ஆகியே ஆகவேண்டும் போலும்.

அப்படியே உங்கள் வீட்டு மொட்டை மாடியோ அல்லது அகன்ற மைதானமோ காலியாக இருந்தால் பொறுத்திருங்கள்.படத்தில் Target போல நீங்களும் கூகிள் எர்த்தில் விளம்பரம் செய்யலாம். :)