
அஜாக்ஸ் (Ajax) என்பது Asynchronous JavaScript and XML என்பதின் சுருக்கம்.இது ஒரு தனி தொழில் நுட்பமல்ல.கலவை தொழில்நுட்பம்.அதாவது Asynchronous
JavaScript+CSS+DOM+XMLHttpRequest எல்லாம் சேர்ந்து அமைத்த கூட்டணி ஆட்சி.
பொதுவாக நாம் கொடுக்கும் சாதாரண http கட்டளைகள் அதற்கு தேவையான சமயம் எடுத்து செர்வர் போய் விடையெடுத்து வந்து கொடுக்கும்.நம்மூர் செய்திதாள் போல.தேர்தல் முடிவுக்கு விடியும் வரை காத்திருக்க வேண்டும்.
அஜாக்ஸ் தொழில் நுட்பமானது அப்படி அல்ல.அது எப்படி இயங்குகிறதென்றால் சாதாரண http கட்டளைகள் விடையெடுக்க செர்வருக்கு போயிருக்கும் வேளையில் அஜாக்ஸ் எந்திரம் இடையில் அமர்ந்து பயனர்க்கு இடைவிடாது தகவலளித்து கொண்டேயிருக்கும்.நம்மூர் சன்நியூஸ் போல. உடனடி தகவல்கள்.ஆனாலும் ரெஸல்ட் நாளைதான் தெரியும். என்றாலும் அஜாக்ஸ் சூடேற்றி கொண்டேயிருக்கும்.பயனருக்கு குஷி.
Seamless results என்கிறார்கள்.
இது பற்றி மேலும் சில எளிய தகவல்கள் இங்கே
http://adaptivepath.com/publications/essays/archives/000385.php
இணையத்தில் அஜாக்ஸின் பயன்பாட்டை அனுபவித்துபாருங்கள் இங்கே
அஜாக்ஸ் இயக்கும் ஆங்கில அகராதி
http://www.objectgraph.com/dictionary/
அஜாக்ஸ் இயக்கும் IP to location மென்சாதனம்
http://www.seomoz.org/ip2loc/ip2loc.php
அஜாக்ஸ் இயக்கும் டொமைன் பெயர் தேடல் எந்திரம்
http://instantdomainsearch.com/
இந்த சூப்பர் தொழில் நுட்பம் பற்றி 90 களிலேயே நம்மூர் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்கள் "பாஷா" திரைபடத்தில் மிக தெளிவாக கூறியிருந்தார்."அஜக்குன்னா அஜக்குதான்" என்று. :)