உலகின் மிகப் பணக்கார நாடு எது தெரியுமா? லக்ஸம்பர்க்காம்
ஏழைநாடு மொசாம்பிக்காம்
மிக சமீபத்தில் பிறந்த ஒரே நாடு கிழக்கு தைமூராம்
மிக வயதான நாடு சான் மரினோவாம் (எகிப்தை காணோம்)
இப்படி அழகாக பொது அறிவு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வேளையில்
ஒரு கேள்விக்கு மட்டும் பதிலேயில்லை.உலகின் மொத்த நாடுகள் எத்தனை?
Answer is There is no right answer.
189-ஆ, 191-ஆ, 192-ஆ, 193-ஆ அல்லது 194 -ஆ எல்லாமே தான்.
ஐக்கிய நாடு அங்கத்தினர் மொத்தம்192.வாட்டிகன் இதில் இல்லை.
அமெரிக்கா அங்கீகரித்துள்ள நாடுகள் மொத்தம் 193. தைவான் இதில் இல்லை.
World Almanacs 193 என்கிறது.ஆனால் what about Palestine? Greenland? Western Sahara? மற்றும் நம்ம ஈழம்?.
நட்சத்திரங்களை எண்ணி பார்க்கும் சவாலை ஏற்கும் முன் நாம் நாடுகளை எண்ணிப் பார்க்க சவால் ஏற்க வேண்டும் போலும்.
http://worldatlas.com/nations.htm
தொடர
மிக சிறிய நாடு வாடிகன் நகரமாம்
மிக பெரிய நாடு ரஷ்யாவாம் (இன்னுமா?)
மிக அதிக மக்கள் தொகை பெருத்த நாடு சீனாவாம்
அதிகமாக நாடுகள் சுற்றியுள்ள நாடும் சீனாவாம்.
இவை சில சுவாரசிய துளிகள்
எதாவது UPSC,TNPSC,Railway,Bank test எழுதும் முன் கீழ்கண்ட பக்கத்தை ஒரு பார்வையிட்டுகொள்ளலாம்.
மட்டுமல்ல "மெகா" தங்கவேட்டைக்கு போகும் போது கூடத்தான்.
மேலும் பார்க்க
தி லிஸ்ட் - பெரிய சிறியக்களின் சங்கமம்
http://worldatlas.com/geoquiz/thelist.htm