Wednesday, June 14, 2006

அண்ணா மேம்பாலமும் கூகுளும்



கூகிளின் சமீபத்திய பீட்டா வெளியீடான கூகிள் எர்த் 4 (Google Earth Release 4 - BETA) எனப்படும் மென்படைப்பு முன்னைய வெளியீட்டிலிருந்து தரம் உயர்த்தி சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது.குறிப்பாக இந்திய சேட்டலைட் மேப்புகள் ஓரளவு தெளிவாக இருக்கினறன.சென்னை மேம்பாலங்கள்,சமாதிகள்,பனகல் பார்க் மற்றும் அனைத்து முக்கிய இடங்களும் தெளிவாக தெரிகின்றன.இம்மென்பொருள் வழி சென்னை மட்டுமின்றி அனைத்து நகரங்களையும்,ஊர்களையும் ஏன் உங்கள் வீட்டைக்கூட சேட்டலைட் பார்வை பார்க்கலாம் .கொஞ்சம் பொறுமை வேண்டும் அவ்வளவு தான்.இதோ பக்கத்தில் சென்னை ஜெமினி மேம்பால சேட்டலைட் பார்வை உங்களுக்காக.கீழே கொடுக்கப்பட்ட சுட்டியை சொடுக்கி இலவச இம்மென்பொருளை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவி பாருங்கள்.
http://earth.google.com/earth4.html

வகை:சலோ இந்தியா
வகை:தமிழ்நாடு
வகை:இலவச சேவைகள்