பொதுவாக ஒரு வலையகத்தின் மதிப்பானது அதன் வயது,அந்த வலையகத்துக்கு பிற வலையகங்களிலிருந்து வரும் சுட்டிகளின் எண்ணிக்கை,எங்கெல்லாம் அவ்வலையகத்தின் பெயர் வரிசைபடுத்தப்பட்டுள்ளது மற்றும் அவ்வலையகத்துக்கு அன்றாடம் வரும் சொடுக்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றை பொறுத்ததாகும்.இங்கே ஒரு வலைத்தளம் தமிழ்மணம் டொமைன் பெயரின் குத்து மதிப்பு விலை என்ன என கணக்கிட்டு கொடுக்கிறார்கள்.கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கி "Check the Resale Value of Your Domain Name"-ல் www.thamizmanam.com என தட்டி "Calculate Price"-யை சொடுக்கவும்.ஏதோ ஒரு கணக்கு கணக்கிட்டு கணிப்பு கணித்து டாலரில் விடையறுக்கிறார்கள்.இதில் தனிப்பட்ட அந்த டொமைன் பெயரின் பிரபலம் மற்றும் அதோடு கொடுக்கப்படும் தற்போது இயங்கும் மென்பொருளின் மதிப்பு ஆகியவை அடங்காது.இத்தகவலானது எல்லா தளங்களுக்குமே பொருந்தும்.
http://www.domains-for-sale-by-owners.com/
இவ்வேளையில் விலைமதிப்பில்லா வலைத்தமிழ்சேவை புரிந்த தமிழ்மணம் காசி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.மீண்டும் இன்னொரு மெகா திட்டத்தோடு மீண்டும் தமிழ் கணிணி வலை உலகில் வலம் வர வாழ்த்துக்கள்.