என்னிலிருந்து சில அரேபிய நினைவுகள்.
1.விபத்தில் மோதிக்கொண்ட இரண்டு வாகனங்களிலிருந்து இறங்கி வரும் அரேபியர்கள் கூட முதலில் செய்வது இருவரும் கைகொடுத்து "சலாம் அலைக்கும்" (I guess it meeans "Peace be with you") என சொல்லிக்கொள்வதுதான்.இதுவே நம்மூரில் என்றால் கதை வேறு.காதை திறக்கமுடியாது.அமெரிக்காவில் நன்கு படித்த இந்திய பெண்கள் கூட சிறு பார்க்கிங் போன்ற விசயத்துக்காக காட்டு கத்து கத்துவதாக கேள்வி.
2.அங்கு சாலையை கடந்து செல்வோருக்காக எந்த வாகனமும் நின்று போகும்.நம்மூரில் "சொல்லிட்டு வந்துட்டியா பேமானி" பட்டம் கிடைக்கும். :)
3.குறிப்பிட்ட சமயமானால் எக்காரியமானாலும் கண்டுக்காமல் தொழுகைக்கு போய்விடுவர்.எனவே ஸாப்பிங் காம்ப்ளெக் முதல் எல்லா இடமும் prayer rooms.
4.சமீப காலமாக வெளிநாடுபோய் கல்வி கற்கும் இளைய அரேபியர் அதிகம்.குறிப்பாக UK,USA,India,Malaysia etc.ஸோ திறமையான work force உருவாகிவருவது உண்மை.அரேபிய அரசுகள் கல்விக்கு சலுகைகளை வாரிவழங்குகிறது.
5.ஆச்சர்யமாக இந்தியா and the rest of the world அரேபிய எண்களையும் அரேபியர் இந்திய எண்களையும் பயன்படுத்துகின்றனர்.
6.துபாய் ஸாப்பிங் சென்டர்களில் உங்கள் ஒருபுறம் தங்களை முழவதுமாய் கருப்புதுணியால் மூடிக்கொண்டு செல்லும் பெண்களையும் இன்னொறுபுறம் தமிழ் கிளாமர் நடிகைகளை விட கேவலமான உடையில் செல்லும் பெண்களையும் காண முடியும்.குழப்பத்தின் உச்ச கட்டம் அது.
7.அபுதாபியின் அழகிய கட்டிடங்களை படம்பிடிக்க கேமராவுடன் நின்றிருந்த நண்பனை ஒரு அரேபிய கிழவன் முறைத்து பார்த்து திட்டியுள்ளான்.அவன் தன் பெண்களோடு குடும்பமாய் சென்று கொண்டிருந்தானாம்.தன் பெண்களை படம் எடுத்துவிடுவானோ என பயந்திருக்கிறான் போலும்.
8.வெள்ளை தோலுக்கு இவர்கள் அளிக்கும் மதிப்பு பற்றி ஏற்கனவே 2004-ல் எழுதியிருக்கிறேன்.படிக்க இங்கே சொடுக்கவும்.
9.எல்லோருமே பணம் படைத்தவர் அல்லர்.சாப்பாட்டுக்கு கஸ்டப்படும் ஏழை அராபுகளும் இருக்கிறார்கள்.நம்மாட்களால் மோசம்போய் ஏமாற்றப்பட்ட போண்டியான அராபுகளும் இருக்கிறார்கள்.நம்மாட்களால் விர்ரென வியாபாரத்தில் கொழுத்த அராபுகளும் இருக்கிறார்கள்.
10.நற்குணம் கொண்டோர்,அறிவாளிகள் திறமைமிக்கோரை பார்த்திருக்கிறேன்.தன்னந்தனியாய் பெண்கள் பின்இரவில் கடலோர வாக்கிங் போவது இங்கே முடிகிறது.
11.கால் பந்தாட்டமும்,கார் ரேசும் அவர்கள் பேவரைட்.
12.செல்போன் பிரியர்,they hate dogs.
13.அமெரிக்காவை எந்த அளவுக்கு வெறுக்கிறார்களோ அந்த அளவுக்கு விரும்புகிறார்கள்.அமேரிக்காவில் குடியேறுவது அநேகரின் கனவு.
14.தமிழன் என்றால் உடனே"டைகர்" தான் அவர்களுக்கு பிளாஷ் ஆகிறது.விசாரிக்கிறார்கள்.
15.சிக்கன மருத்துவத்துகாக இந்தியா வருவோர் அநேகர்.
16.இந்தியாவில் ரயில் பயணம் அவர்கள் ரசிப்பதில் ஒன்று.No trains over there.
17.அமிர்தாப்பாச்சனுக்காய் உயிரை விடும்,தினமும் பிரார்த்தனை பண்ணும் அரேபியர் அநேகம்.
18.பாலிவுட்டின் தாக்குதல் இங்கு வெகு பளீர்.வயதான அரேபியர்கள் பழைய இந்தி தத்துவ பாடல்களின் ரசிகர்கள்.
19.தமிழர் படை சிங்கப்பூர்,மலேசியாவில் என்றால்,தெலுங்கர் படை அமெரிக்காவில் என்றால் மலையாளப்படை வளைகுடாதான்.அரேபியர் மலையாளம் பேசுவதை பார்த்திருக்கிறேன்.மலையாளம் தெரிந்தாலே இங்கு பிழைத்துக்கொள்ளலாம் போலும்.
20.பொதுஇடங்களில் பெரும்பாலும் அவர்கள் பேச்சு பாலஸ்த்தீன்,இராக்,அமெரிக்கா,இஸ்ரேல் ப்ற்றித்தான் இருக்கிறது.
21.அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்று வீழ்ந்தால் மொத்த அரேபிய உலகமும் மகிழ்வு கூத்தாடுகிறது என்பது மறுக்க இயலா உண்மை.
23.பின்லேடன்-நம்மூரில் எம்ஜிஆர்,ரஜினி போல் அங்கு அனேகருக்கு ஹீரோ.
24.சிலவகையான ஏற்ற தாழ்வுகள் அவர்களுக்குள்ளும்.வேலையில் முன்னுரிமை,அரசியலில் சமுதாயதில் முன்னுரிமை போன்ற ஏற்ற தாழ்வுகள்,சில இனவேறுபாடுகள் உள்ளன.
25.பத்து மைல்களுக்குள் கிடைக்கும் அந்த வாழ்வியல் மகா வேறுபாடு பக்ரைனிலிருந்து சவுதியாவுக்கு தரைவழி பயணம் போனால் தெரியும்.வேறெங்கும் இந்த அனுபவம் கிடைக்குமா என தெரியவில்லை.
ஆட்டம் பாட்டமென களிப்பிலிருக்கும் பக்ரைனிலிருந்து சவுதியாவுக்கு போகும் அந்த பஸ்களில் பயணிக்கும் ஒவ்வொரு இதயமும் எப்படி துடிக்கும் என நான் அறியேன்.பெரும்பாலோனோர்க்கு புண்ணிய பூமியில் நுழையும் பக்தியும் மகிழ்வும் இருந்தாலும் ஏதோ ஒரு இனம் புரியாத பயம் எல்லோரையும் கண்டிப்பாக பிடித்திருக்கும் என்பது உண்மையே.
இப்பதிவுக்கும் கால்கரி சிவாவுக்கும் சத்தியமாக சம்பந்தம் கிடையாது.நம்புங்கள். :)
அரேபிய இந்திய காரமான செய்திகள்
http://www.keralamonitor.com/
அரேபிய வேலைவாய்ப்புகள்
http://www.bayt.com
http://www.khaleejtimes.com/