Monday, April 3, 2006

திருட்டுப் பதிவு

திருட்டு வி.சி.டி போல் திருட்டுப் பதிவு எனப்படுவது சீக்கிரமாய் மார்க்கட்டில் வந்துவிடலாம்.கஷ்டப்பட்டு ஒருவர் தயாரித்த சினிமாவை எளிதாய் ஒருவர் வி.சி.டியில் காபி செய்து விநியோகித்து சம்பாத்தித்து விடுவார்.இது போல் கஷ்டப்பட்டு ஒருவர் பதிவு எழுத இன்னொருவர் அதை எளிதாய் காப்பி பேஸ்ட் பண்ணி தன்னோடைய பதிவிலோ இல்லை இணையத்திலோ வெளியிட வாய்ப்பு உண்டு.

இது போல உங்கள் எழுத்துக்களை யாராவது காப்பி அடித்திருக்கிறார்களா என கண்டறிய இதோ ஒரு இலவச சேவை.Search for copies of your page on the Web. http://www.copyscape.com/உங்கள் URL-ஐ மட்டும் டைப் செய்யுங்கள்.

இணையம் பூரா தேடி யார் யார் உங்களிலிருந்து காப்பி அடித்திருக்கிறார்கள் என இது லிஸ்ட் போட்டு கொடுத்துவிடும்.

உங்கள் பதிவு அது உங்கள் உழைப்பு.அது உங்கட்கே சொந்தம்.இல்லையா?

வகை:அமெரிக்கா