Tuesday, January 12, 2010

கற்கள் சொல்லாத கதைகள்

சில வரலாற்று கதைகளுக்கு நாம் சான்றுகளை தேடிக் கொண்டிருக்க சில இடங்களில் அதுவே மாறி இருப்பதுண்டு. என்னென்னமோ சான்றுகள் இருக்கும் கதைகள் கிடைப்பதில்லை. இப்படித்தான் இங்கிலாந்தில் நட்டமாய் நிற்கும் கற்களின் கதைகளும்.Stonehenge என்கின்றார்கள். டன் கணக்கில் எடைகொண்ட இக்கற்கள் எக்காலத்தில் எதற்காக இவ்வளவு அழகாக செதுக்கப்பட்டு இப்படி கதவுசட்டம் போல் நிற்கவைக்கப்பட்டிருக்கின்றனவோ தெரியவில்லை. இன்னமும் பல வரலாற்றறிஞர்களுக்கு இது ஒரு புரியாத புதிர். கொஞ்சம் சிறியதாக இருந்திருந்தால் அந்த காலங்களில் வழிப்போக்கர்கள் ஓய்வெடுக்க அமைக்கப்பட்டிருந்த அம்பலங்கள் முன்பாக அல்லது ஆல மரத்தடிகளின் முன்பாக நிறுவப்பட்டிருக்கும் சுமைதாங்கியாக எடுத்துக்கொள்ளலாம். இவ்வளவு பெரிய கல்லை கிமு காலத்திலேயே அப்படி அலாக்காக தூக்கி மேலே நிறுத்தி வைத்திருக்கின்றார்கள் என்றால் ஏன் எப்படி எதற்காக என பலருக்கும் புரிந்ததில்லை. இறந்தோர் நினைவாகவாக இருக்கலாம் என சிலர் பேச உங்களுக்கு ஏதாவது புரிகின்றதா? புரிந்தால் நீங்களும் வரலாற்றறிஞர் ஆகலாம்.

எங்களூர் அருகே மருத்துவாமலை அல்லது மருந்துவாழ்மலை என்றொரு மலை உண்டு. மூலிகைகளால் நிறைந்தது. அனுமான், இலங்கையிலிருந்த ராமனின் சகோதரனான லட்சுமணனின் காயத்துக்கு கட்டுபோட மகேந்திரகிரியிலிருந்து கொண்டு போன சஞ்சீவி மலையின் ஒரு துண்டு வழியிலேயே கீழே விழுந்து அது இப்போதைய மருத்துவா மலையானதாக சொல்வார்கள். இன்றைக்கு மார்த்தாண்டம் என அறியப்படும் இடம் முன்பு தொடுவெட்டி எனப்பட்டது. இதிகாசம் ஒன்றில் யாரோ ஒருவரின் தொடை இங்கு வைத்து வெட்டப்பட்டதால் அது தொடைவெட்டி அல்லது தொடுவெட்டி என்றானதாக இன்னொரு கதை உண்டு. சில விசயங்களில் நமக்கு அவ்வளவாய் ”விவரம்”தெரிவதில்லை.

இலங்கை தீவின் தமிழீழப்பகுதியில் திருநெல்வேலி, நாகர்கோவில் என்ற பெயரில் ஊர் இருப்பதாக கேள்விபட்டிருக்கின்றேன். இங்கிலாந்தில் ஒரு மெட்ராஸ் உண்டாம். அமெரிக்காவிலும் ஒரு salem இருக்கின்றது. மஸ்கட்டிலும் ஒரு மதுரா உண்டு. இண்டரெஸ்டிங் தான். கீழே நீங்கள் காணும் சில படங்கள் இராமாயண இதிகாசத்தில் வரும் இடங்கள். பெரும்பாலும் இலங்கையிலுள்ளன.

ராமன்... Oops ராவணன் சீதையை வைத்திருந்ததாக சொல்லப்படும் அசோக வனம்
Updated:
மாற்று கருத்துக்கள்:
இப்படம் கர்நாடகா மாநிலம், பெல்லாரி மாவட்டம் ஹம்பியிலுள்ள விஜய விட்டாலா (Vijaya-Vitthala) கோவில் வளாகத்தின் ஒரு பகுதி எனவும் இக்கோவில் 15-ஆம் நூற்றாண்டில் விஜயநகரபேரரசர்களால் கட்டப்பட்டதாகவும் இக்கோவிலுக்கும் இராமாயணத்துக்கும் சம்பந்தம் இல்லை எனவும் சில குறிப்புகள் கூறுகின்றன.. ஆனாலும் இராமாயணத்தில் வரும், குரங்கு அரசான கிஷ்கிந்தையுடன் ஹம்பி அடையாளம் காணப்படுவது உண்டு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


அனுமானால் அழிக்கப்பட்டதாக சொல்லப்படும் ராவணனின் அரண்மனை


சுக்ரிவனின் குகைகள்.
Updated:
மாற்று கருத்துக்கள்:
”இங்கே குறிப்பிட்டிருக்கும் படங்களில், 'சுக்ரிவனின் குகைகள்' எனக் குறிப்பிட்டிருக்கும் படங்கள் தவிர்த்து, வேறெதுவும் இலங்கையில் இல்லை” என ஒரு இலங்கை நண்பர் தெரிவிக்கின்றார். சீகிரிய குகை என அழைக்கப்படும் இலங்கையின் பிரசித்தமான அக் குகை, இலங்கை அரசன் காசியப்ப ஒளிந்திருந்த இடமாக உள்ளது. அந்த ஓவியங்கள் அவரால் வரையப்பட்டு சீகிரியக் குன்று ஓவியங்கள் என அறியப்பட்டுள்ளன. சீகிரிய பற்றிய மேலதிக விபரங்களுக்கு,
http://en.wikipedia.org/wiki/Sigiriya

இன்னொரு நண்பர் ”இங்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ராவணன் சீதையை வைத்திருந்ததாக சொல்லப்படும் அசோக வனம், அனுமானால் அழிக்கப்பட்டதாக சொல்லப்படும் ராவணனின் அரண்மனை போன்ற இலங்கையில் இல்லை..'சுக்ரிவனின் குகைகள்' எனக் குறிப்பிட்டிருக்கும் படங்கள் காசியப்ப மன்னனால் குடைந்து கட்டப்பட்ட சிகிரியாக் குகைமாளிகை தந்தையான தாதுசேனனை உயிருடன் சமாதிகட்டி கொன்றுவிட்டு, அந்த அவலத்தை மறந்து வாழ அவனால் அமைக்கப்பட்டது.” என்கின்றார்.




மூலிகைகள் கொண்ட சஞ்சீவிமலை
Updated:
மாற்று கருத்துக்கள்:
இது பற்றிய ஒரு நண்பரின் கருத்து: “மூலிகைகள் கொண்ட சஞ்சீவிமலை என நீங்கள் குறிப்பிட்டிருப்பது adam's peak என ஆங்கிலத்திலும் "சிவனொளிபாத மலை" என தமிழிலும் "சிறீபாத" என சிங்கள மொழியில் அழைக்கப்படும் மலை. அவ் மலையில் சிவனுடைய பாதம் பதிந்த அடையாளம் இருப்பதாக தமிழர்களும், புத்தருடைய பாத அடையாளம் இருப்பதாக சிங்களவர்களும் ஆதாமின் பாத அடையாளம் இருப்பதாக கிறீஸ்தவர்களும் நம்புகின்றனர்.. ”
நண்பர்களுக்கு நன்றி.


வானரசேனைகளும் ராமனும் சேர்ந்து உருவாக்கிய பாலத்திற்கு உதவிய மிதக்கும் கற்கள்


வானரசேனைகளும் ராமனும் சேர்ந்து உருவாக்கிய அந்த பாலம்


சஞ்சீவி மலையின் ஒரு துண்டு இன்றைய மருத்துவாமலையாக கன்னியாகுமரி மாவட்டத்தில்



”இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை.
ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.”
-நபிகள் நாயகம்








கமழ் மு.சாலோமோன் “டேவிட் பேசுகிறான்” கிறிஸ்தவ தமிழ் மென்புத்தகம். Kamal M.Solomon "David Pesukiran" Christian ebook in Tamil Pdf Download. Click and Save.Download