(யாரோ ஒரு விருந்தினர் தான் பாலில் (Milk) தான் குளிப்பேன் என அடம்பிடித்ததால் பாலால் குளியல் தொட்டியை நிரப்பி கொடுத்ததாம் இந்த ஓட்டல் நிர்வாகம்.எத்தனை உண்மை தெரியவில்லை.)
Thursday, January 11, 2007
உலகின் ஒரே 7 நட்சத்திர ஓட்டல்
Vegas of the Middle East எனப்படும் துபாயிலுள்ள 54 மாடிகள் கொண்ட உலகின் உயரமான (321மீ) படத்தில் நீங்கள் காணும் இந்த ஓட்டல் தான் புர்ஜ் அல் அராப் - Burj Al Arab-Dubai (அதாவது அராபியர்களின் கோபுரம்) எனப்படுகின்றது.தங்களை உலகின் முதன் முதல் மற்றும் ஒரே 7 நட்சத்திர ஓட்டல் எனக் கூறிக்கொள்கிறார்கள்.ரொம்ப காஸ்ட்லி.ஒரு நாள் குறைந்த வாடகை 70000ரூபாய்க்கும் மேல் என்றால் பாருங்கள்.தங்கள் விருந்தினர்களை கூட்டிவர BMW,Rolls Royce கார்கள் மற்றும் கெலிகாப்டர்களையே பயன்படுத்துகிறார்கள்.இதற்காக உயரத்தில் ஒரு கெலிபேட் -Helipad -கெலிகாப்டர் இறங்கும் தளம் அமைத்திருக்கிறார்கள்.அதை டென்னிஸ் தளமாக்கி உலகின் நம்பர் ஒன் ரோஜர்பெடரரும் , அன்ரூ அகாசியும் விளையாடுவதையும் தான் படத்தில் பார்க்கிறீர்கள்.துபாய் நகர கார்கள் தங்கள் நம்பர் பிளேட்டுகளில் இவ்வோட்டலின் படத்தை பெருமையாக இட்டுக்கொள்கின்றன.