Wednesday, May 5, 2004

வரிகள்புதன்-28

ஓரிடம் நீ கொடுத்தாய்



தலைவி தலைவனை நினைத்து பாடுகிறாள்



அன்றொருநாள் இதே நிலவில்

அவன் இருந்தான் என் அருகில்-நான்

அடைக்கலம் கொண்டேன் அவன் அழகை நீ

அறிவாயோ வெண்ணிலவே



வானும் மதியும் மாறாமல் போனால்

நானும் அவனும் நீங்காமல் இருப்போம்

சேர்ந்து சிரிப்போம்

சேர்ந்து நடப்போம்

காதல் மேடையிலே

நீ சாட்சியடி வெண்ணிலவே



-சின்ன வயதில் எதிலோ படித்தது.ரொம்ப பிடித்ததால் அப்படியே நினைவில் நின்றுவிட்டது.மூலம் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.திரைப்பாடலாகவும் இருக்கலாம்.