Tuesday, March 2, 2010

கேமராவை மூடு

மடிக்கணிணிகளும், பொடிக்கணிணிகளும் (Netbooks) திரைமேலே கேமரா துளை தாங்கி வர இப்போது இன்னொரு பிரச்சனை முளைத்திருக்கின்றது. உங்கள் அறையானது தூரத்திலிருந்து யாராலோ பார்க்கப்படலாம். அமெரிக்க பள்ளிகள் சிலவற்றில் வழங்கப்பட்ட மடிக்கணிணிகளை வீடு அல்லது ஹாஸ்டல் கொண்டு சென்ற மாணவ மாணவிகளின் நடவடிக்கைகள் இந்த மாதிரியாக வெப்கேமராக்களால் தூரத்திலிருந்து உளவு பார்க்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் இப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கின்றது. பள்ளி மடிக்கணிணிகள் திருடப்பட்டாலோ அல்லது காணாமல் போனாலோ கண்டு பிடிக்க அது உதவும் என்கின்ற நோக்கில் நிறுவப்பட்டுள்ள இந்த ஒளிந்திருக்கும் மென்பொருளால் எங்கோ அமர்ந்திருக்கும் ஒருவர், பள்ளிச் சிறார்களின் அறையை உற்று நோக்கலாம். அவர்கள் நடவடிக்கைகளை பார்க்கலாம்.
கொடுமையை இந்த யூடியூப் வீடியோவில் பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=Vza_bMuy42M

இதற்காக LANRev போன்ற அஃபிசியல் உளவு மென்பொருள்கள் பயன்படுத்தப்பட்டாலும், இணையத்தில் கிடைக்கும் எத்தனையோ இலவச மென்பொருள்கள் மூலம் இது மாதிரி தொலைவிலிருக்கும் மடிக்கணிணியின் வீடியோ கேமராவை தான் பார்க்கவென ஒரு ஹேக்கர் திருப்பிவிடலாம். எசகுபிசகாகப் போனால் மானத்தை கேமரா பறக்க விட்டுக்கொண்டிருக்கும் சுத்தமாக எந்த சுவடுமேயின்றி. கதவு திறந்திருந்தால் போவதை விட, படுக்கை அறையில் மடிக்கணிணி கேமரா திறந்திருந்தால் ஆகும் எஃபக்ட் ரொம்ப அதிகம். இணையம் வரைக்கும் போகும். சில சமயம் சன்நியூசிலும் போகும். இப்படித்தான் அந்த ஆ’சாமி’யின் வீடியோ வெளியானதா தெரியாது.

இதை தவிற்க என்னென்ன செய்யலாமென யோசித்த போது முதலாவது உங்கள் மடிக்கணிணி இந்தமாதிரியான integrated வெப்கேமரா கொண்டிருந்தால் பிறர் அதில் எதாவது ஒரு மென்பொருள் நிறுவும் அளவுக்கு விளையாட விடாதீர்கள். இரண்டாவதாக தேவைப்படும் போது மட்டும் வெப்கேமை பயன்படுத்தவும், தேவை இல்லாத போது அதை Device Manager-ல் போய் Disable செய்யவும். இது கொஞ்சம் டெக்னிக்கலாக உங்களுக்குத் தெரிந்தால், இருக்கவே இருக்கின்றது ஒரு பேப்பர் ஸ்டிக்கர். அந்த துளை மீது ஒட்டி விடுங்கள். அல்லது ஒரு sticky note-ஐயாவது ஒட்டிவிடலாம். அல்லது குறைந்த பட்சம் தேவை இல்லாத போது மடிக்கணிணிகளை மூடியாவது வைத்திருக்கலாம். பாருங்கள் எந்த மாதிரியான தகவல்களையெல்லாம் இப்போது சொல்ல வேண்டியிருக்கின்றது.


எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
-இங்கிலாந்து.










தவயோகி தங்கராசன் அடிகளார் “ஆன்ம தத்துவம்” மென்புத்தகம். Thavayogi Thangarasan Adikalaar "Aanma Thathuvam" Tamil ebook Pdf Download. Click and Save.Download