Saturday, October 24, 2009

நம்மை பார்த்துத் தான்

ரொம்ப நாளாகவே அந்த டிவிடி பிளயரை வாங்க வேண்டுமென கோபாலுக்கு ஆசை. போன வீக்கெண்டு வாங்கி வந்திருந்தான். Philips DVP5992. பெஸ்ட்பை- யில் 60 டாலருக்கு கிடைத்ததாம். போஸ்ட் ஆபீசில் கிடைக்கும் USPS movers coupon pack-யை நவிட்டி அதிலிருந்த கூப்பனால் 10% தள்ளுபடியில் வாங்கியிருக்கின்றான். ஆனாலும் அந்த விலை செலுத்த வேண்டி வந்தது. என்ன ஒரே நன்மை விற்பனை வரி கட்டாமல் வாங்கினது போல் இருந்ததாம். இந்த டிவிடி பிளயரில் இருக்கும் USB இண்டர்பேஸ் தான் அவன் பேவரைட். பார்க்க விரும்பும் வீடியோவை நொடியில் பென்டிரைவ் ஒன்றில் காப்பிசெய்து அதை அந்த டிவிடி பிளயரில் செருகி பார்க்கலாம் என்பது தான் அதன் விசேசம். வீணாக சிடி அல்லது டிவிடிக்களை எரிக்க வேண்டியதில்லை. எரித்தும் என்ன பிரயோஜம். சீக்கிரத்தில் கிறுக்கல் விழுந்து விடுகின்றது. அல்லது அழுக்கு பிடித்து விடுகின்றது. இந்தியாவில் ஓனிடாக்காரர்கள் “உங்களை பார்த்துதான் டிசைன் செய்தோம்” என்ற கோஷ வரிசையில் இந்த வசதிகொண்ட டிவிடி பிளையரை வெளியிட்டிருக்கின்றார்கள். சன் டிவியில் பார்த்த நியாபகம். விலை கொஞ்சம் எகிறுமாயிருக்கும். Jpg படங்கள், Mpeg வீடியோக்களையெல்லாம் USB பென்டிரைவில் காப்பிசெய்து அதை அப்படியே தனது HDTV யில் ஓட்டி காட்டினான். நன்றாக இருந்தது. இந்த மாதிரியான டிவிடி பிளயர்களை HDTV-யோடு இணைக்க HDMI எனும் கேபிளை பயன்படுத்தலாம். மற்ற கலர் கலரான நீலம்,பச்சை,சிவப்பு component வீடியோ கேபிள்களை பயன்படுத்தினால் பல கேபிள்களை ஆடியோ வீடியோக்குவென பயன்படுத்த வேண்டியிருக்கும். தரமும் கம்மியாக இருக்கும். இதுவே HDMI கேபிள் ஒரே கேபிளாக இருப்பதோடு தரமும் நன்றாக இருக்குமாம். அமேசானில் ஆறடி HDMI கேபிள் மூன்று டாலருக்கு கிடைக்கின்றது. தனது வீடியோக்களையெல்லாம் சேமித்துவைத்து இப்படி அப்பப்போ வசதியாக தனது டிவியில் பார்க்க Western digital Passport 500GB நல்ல டீலில் கிடைக்குமாவென தேடிக்கொண்டிருக்கின்றான்.100 டாலர்கிட்ட ஆகின்றது. ஐந்து வருடங்களுக்கு முன்பு 1GB = 1 டாலர் விகிதத்திலிருந்த ஹார்டிரைவின் விலை இன்றைக்கு 1GB=0.20 டாலராகியிருக்கின்றது நல்ல சேதி. எக்ஸ்ராவாய் ஒரு பவர் அடாப்டரை தூக்கிக்கொண்டு சுத்தாமால் கூடவரும் USB கேபிளே தேவையான பவரை டிரைவுக்கு கொடுத்தால் போர்ட்டபிளாக சட்டைப் பையில் வைத்துக்கொண்டு சுற்றலாம். அதுதான் வெஸ்ட்ரன் டிஜிட்டல் பாஸ்போட்டின் அருமை. இந்த டிவிடி பிளயர்களில் இப்போதிருக்கும் ஒரே குறை NTFS file system வேலைசெய்வதில்லை. FAT32 file system-த்தில் மட்டுமே அந்த USB டிரைவ் ஃபார்மேட்செய்யப்பட்டிருக்கவேண்டும். உங்கள் விண்டோஸ் ஒருவேளை 500gb டிரைவை FAT32-வில் ஃபார்மேட் செய்யவிடாமல் அடம்பிடித்தால் உங்களுக்கு fat32format எனும் இந்த சின்ன மென்பொருள் உதவலாம்.
http://www.ridgecrop.demon.co.uk/index.htm?fat32format.htm

Direct Download link
Fat32format.zip


சிந்திக்காதவன் முட்டாள்
சிந்திக்கத் துணியாதவன் கோழை
சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன் -டிரம்மண்ட்










வஞ்சிமாநகரம் வரலாற்றுக் கதை மென்புத்தகம்.Vanji Maanakaran Historic Fiction in Tamil pdf ebook Download. Click and Save.
Download