Wednesday, July 22, 2009

எட்டாதவை

காண்பது தான் உலகம் அதற்கும் மேல் வேறெதுவும் இல்லை என்பது தான் நம்மில் பலரும் நம்புவது. நம் புலன்களுக்கு எட்டாததால் பொருளுலகம் தவிர வேறுலகம் இல்லை என ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றோம். குத்திருட்டில் நாய் எதையோ பார்த்து குரைக்கின்றது ஊளையிடுகின்றது. நம் கண்களுக்கு எட்டாதது எதுவோ அதற்கு எட்டியிருக்கின்றது எனலாமா? அப்படியே தான் அதன் மோப்ப சக்தியும். புலன் விசாரணையில் துப்பறிய ஒரு நாய் பயன்படுத்தப்படும் போது ஏன் அப்பணியை செய்ய இன்னும் ஒரு ரோபோ உருவாகக்கப்படவில்லை. சில மாயநிலைகள் நம் புலன்களுக்கு மட்டுமல்ல கருவிகளுக்கும் கூட இன்னும் எட்டாதவையே. 20 Hz முதல் 20 kHz வரையேயான ஒலிகளை நம் சாதாரண காதுகளால் கேட்க முடிகின்றது. அதுவே அதற்கும் மேல் போனால் அதை கேட்க எப்.எம் ரேடியோக்கள் வேண்டும். வெறும் காதுக்கு எட்டாததால் 93.5 -அலைவரிசையில் சூரியன் எப்.எம் இல்லை என்றாகிவிடுமா? பூமிஅதிர்ச்சி வரப்போகின்றதென்றால் மிருகங்களின் புலன்களுக்கு ஏதோ ஒரு வகையில் அச்செய்தி எட்டிவிடுகின்றதாம். மனித ஜென்மத்தால் தான் இன்னும் அது முடியவில்லை. எதாவது ஒரு கருவி கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

திடம் திண்மம் வாயு இந்த மூன்று நிலைகளில் ஒன்றில் தான் பொருட்கள் இருக்கமுடியும் என பள்ளியில் சொல்லித் தந்தார்கள்.
நெருப்பு அது திடமா? திண்மமா? வாயுவா?
சூரியன் அதன் ஸ்டேட் என்ன? திடமா? திண்மமா? வாயுவா?
ஒளி அது துகளா இல்லை அலையா? இன்னும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.
மூன்று தன்மைகளும் சேர்ந்தாப்போல் பிளாஸ்மாவென நான்காவதாக ஒரு நிலை இருக்கலாமென சொல்லிவைத்திருக்கின்றார்கள்.

நம் சரீரம் திடம், நம் இரத்தம் திரவம், நாம் சுவாசிக்கும் ஆவி வாயு, நம் ஆன்மா பயோபிளாஸ்மாவோவென ஒரு தற்காலிக முடிவு.

பொருளுலகில் உள்ளவை நம் புலன்களுக்கும் கருவிகளுக்கும் கட்டுபடும். பொருள்களுக்கு அப்பாற்பட்டவை எப்படி நம் கருவிகளுக்கோ கண்களுக்கோ கட்டுபடும்? அப்படி கட்டுபட்டால் அது பொருள் என்றாகிவிடுமே. எனவே நாம் எப்போது அந்நிலை அடைகின்றோமோ அப்போதுதான் பொருள்களுக்கு அப்பாற்பட்டவற்றை உணரமுடியும் எனலாமா?

Channel 4 - Dispatches (June 2009) - Terror in Mumbai எனும் ஒரு டாக்குமெண்டரி வீடியோவை சமீபத்தில் காண நேரிட்டது. அதிர்ச்சியிலிருந்து மீள ரொம்ப சமயம் பிடித்தது.
http://www.vimeo.com/5409826

துன்பமும் வேதனையும் என உலகம்
ஆனாலும்....
பூக்கள் மலரும்
- ஐஸா









706 பக்க மாபெரும் ஆனந்த விகடன் சமையல் குறிப்புகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக.Tamil recipes Anathavikatan Mega Collection pdf ebook Download. Click and Save.
Download