
இப்படியே மின்சாரத்தையும் கம்பியின்றி கடத்த முடியுமா?
அப்படி கடத்த முடிந்தால் எத்தனை மாற்றங்கள் உலகில் உருவாகும்.யூகிக்க கூட முடியாத ஒன்று.
நெடுஞ்சாலைகளில் மைல்கணக்கில் வேகமாய் நம் கூடவே வரும் அந்த பருத்த மின்கம்பங்களும், கம்பிகளும் காணாமல் போய்விடும்.
பாக்கெட்டில் இருக்கும் செல்போன் தானாய் வயர்லெஸ்ஸாய் சார்ஜ் ஆகிவிடும்.EB-க்கு தனியாய் காசு கட்டலாம்.
மின்சார பேருந்துகள் ஓடிக்கொண்டே இருக்க வயர்லெஸ்ஸாய் அதற்கு கரண்ட் சப்ளை ஆகிக்கொண்டேயிருக்கும். இப்படி எல்லாமே மாறிப்போகும்.
இதெல்லாம் சாத்தியமா? சமீபத்திய ஆய்வுகள் சில இவை சாத்தியம் என்கின்றன. இதை Wireless Electricity Power Transfer என்கின்றார்கள். மைக்ரோவேவ் ஓவன் மாதிரி ஒர் அறையை இந்த மின்னலைகளால் நிறைத்து அந்த அறை முழுவதும் மின்சாரத்தை கம்பியின்றி கடத்த முயன்றிருக்கிறார்கள். கி.பி 3000-த்தில் உங்களிடமுள்ள மின்கருவிகள் எல்லாம் வயர்கள் தொல்லைகள் எதுவும் இன்றி தானாய் இயங்க உலகமே இவ்வலைகளால் நிறைந்திருக்கலாம். யாருக்குத் தெரியும்?
அட குடி தண்ணீரை கூட குழாயின்றி கடத்தலாம்ங்க. மேகம் டன் டன்னாய் வானில் தண்ணீரை குழாயின்றி கடத்த வில்லையா என்ன? :)
ஆனால் ஒன்று. அதுவரை மாறி மாறி குண்டு வைத்து தகர்த்து தன்னை தானே கொல்லும் மனித ஜன்மம் தான் இருக்குமோ என்னவோ தெரியவில்லை.
Ref 1 2

"கடைசி பேட்டி" கிருட்டிண மூர்த்தியின் மர்மக்கதை புதினம் மென்புத்தகம் Mohan Krishnamoorthy "Kadaisi Paetti" Novel pdf Tamil e-book Download. Right click and Save.Download