Friday, November 16, 2007

அப்லோட் அபாயங்கள்

இன்றைய தேதியில் இணையத்திலிருக்கும் இலவச கோப்புகிடங்குகளின் (Free File Storage) எண்ணிக்கை எண்ணற்றவை. உதாரணமாய் www.4shared.com, www.esnips.com போன்றவற்றை சொல்லலாம். 5 Gig வரைக்கும் இலவச ஸ்டோரேஜ் கொடுக்கின்றார்கள். நம் கணிணிகளில் வைத்திருப்பதை விட இவைகளில்
சேமித்து வைத்தால் டேட்டாவும் பாதுகாப்பாய் இருக்கும் கூடவே எங்கிருந்து வேண்டுமானாலும்
இணையம் வழி டேட்டாவை எடுத்துக் கொள்ளலாம் என்பது மிக வசதி.

ஆரம்பத்தில் MP3 மற்றும் இலசவமாய் ஆங்காங்கே கிடைத்த மென்பொருள்கள், மென்புத்தகங்கள், சினிமா கிளாமர் படங்கள், வீடியோ கிளிப்புகளை மட்டுமே சேமித்து வைத்து வந்த நம்மவர்கள்
இப்போது தங்கள் தனிப்பட்ட தகவல்களையும் சேமித்து வைப்பது கவலைக்குரியது. இவற்றில் தனிநபர் மற்றும் குடும்ப அங்கத்தினர்களின் பயோடேட்டாக்கள், சர்டிபிக்கேட் ஸ்கான் நகல்கள், முக்கிய வியாபார மற்றும் வேலை சம்பந்தபட்ட கோப்புகள், குடும்பமாய் எடுத்து கொண்ட போட்டோக்களும் அடுக்கம்.

இவற்றை ஒரே கிளிக்கில் இது போன்ற கோப்புகிடங்குகளில் அப்லோட் செய்துவிட்டு விடுவதால் இத்தகவல்கள் அனைத்தும் அனைவர் கைகளிலும் கிடைக்க வசதியாகிவிடுகின்றது. கேசுவலாய் எடுத்த சில குடும்ப பெண்கள் படங்கள் பொதுநபர் பார்வைக்கு போகின்றது. சிலர் அதை எடிட்டிங் செய்து தவறுதலாய் கூட பயன்படுத்தலாம். சிலர் தங்கள் பாஸ்வேர்ட்களை அழகாய் டைப்பி ஒரு டெக்ஸ்ட் கோப்பில் வைத்து அப்லோட் செய்து வைத்திருக்கின்றார்கள். என்ன கொடுமை பாருங்கள்.

அப்பாய்மெண்ட் ஆர்டர்களையும் ஏன் அமெரிக்க கான்சுலேட்டோடு ஒரு நபர் கொண்ட மொத்த தகவல் தொடர்புகளையும் கூட நான் தவறுதலாய் இக்கிடங்குகளில் காண நேரிட்டது. இத்தனைக்கும் இவர்களில் பலர் சாப்ட்வேர் இஞ்சினியர்கள்.

உதரணமாய் இங்கே கிளிக்கி பாருங்கள்.resume என்ற கீ வார்த்தை கொடுத்து தேடினால் esnips கொடுக்கும் லிஸ்ட் இது.
http://www.esnips.com/_t_/resume

இது லைம்வேர் (Limeware) போன்ற P2P மென்பொருள் வழி கோப்புகள் பறிமாற்றம் செய்பவர்களுக்கும் பொருந்தும்.இவர்கள் தெரியாத்தனமாய் தங்கள் கணிணியின் மொத்த டிரைவையுமே உலகுக்கு ஷேர் செய்திருக்க வாய்ப்புண்டு.

So தீர்வுதான் என்ன? இது போன்ற கோப்புகிடங்குகளில் சேமிக்கும் போது Private எனும் கட்டத்தை கண்டிப்பாய் டிக்குங்கள். Public கட்டம் திறந்தே இருக்கட்டும் அல்லது Do not share போன்ற வசதிகள் இருக்கிறதாவென பாருங்கள். இப்படி பட்ட வசதிகள் இல்லாவிட்டால் அக்கிடங்குகளுக்கு முழுக்கு போடுதல் நலம்.

Peer 2 Peer-அப்ளிகேசன்களிலும் எந்த டிரைவ் அல்லது எந்த ஃபோல்டர் வெளிஉலகுக்கு திறந்திருக்கிறதுவென கட்டாயமாய் தெரிந்திருத்தல் நல்லது. Anyway Have a Happy File sharing!!


"புதிய ஏற்பாடு" தமிழ் வேதாமம் ஆடியோ புத்தகம் MP3 வடிவில். Tamil Bible New Testment MP3 Audio Book
Click here to download.