Tuesday, April 3, 2007

தரையிலும் தண்ணீரிலும் போகும் பேருந்து

மனிதனின் எண்ணங்களுக்கும் ஆற்றல்களுக்கும் அளவில்லாமல் போய்விட்டது. அவை அப்புறம் பயன்பாடுகளாய் வரும்போது நமக்கு ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றது.உல்லாசப் பயணிகளை மகிழ்விப்பதற்க்காக துபாய் நகர சாலைகளில் ஓடி அப்புறமாய் அந்நகர கிரீக் எனப்படும் நதியிலும் ஓடி அந்நகர அழகை காட்டும்படி நியூயார்க்கிலிருந்து உருவாகி வந்திருக்கிறது இந்த புத்தம் புதிய தரையிலும் தண்ணீரிலும் போகும் பேருந்து (Amphibious Wonder Water Bus Dubai). முற்றிலும் குளிர்சாதன வசதிசெய்யப்பட்ட, பெரிய திரை தொலைக்காட்சிபெட்டியுடன் கூடிய இந்த பஸ்ஸில் ஒரே நேரத்தில் அதிகமாய் 44 பேர் பயணிக்கலாமாம்.டிக்கட் விலை 34 டாலர்கள்.குழந்தைகளுக்கு 23 டாலர்கள். இரு குழந்தைகளுடன் கூடிய குடும்பத்துக்கு 107 டாலர்கள்.பஸ் போகும் பாதையை படத்தில் பார்க்கலாம். துபாய்வாசிகளுக்கு கொண்டாட்டம் தான்.

Saturday to Wednesday Trip
First Trip : 10:00 A.M. - 12:00 Noon Second Trip : 5:30 P.M. - 7:30 P.M.

Thursday and Friday Trip
First Trip : 10:00 A.M - 12:00 Noon Second Trip : 3:00 P.M. - 5:00 P.M.
Last Trip : 5:30 P.M. - 7:30 P.M.