Thursday, November 9, 2006

ரூபி போகும் ரயில்

வெப் டெவலப்பர்கள் உலகில் இன்று சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு ஜார்கன் "Ruby on Rails".இது ஒரு சில சமயங்களில் RoR அல்லது Rails எனப்படுகிறது. Perl , Python போன்ற ஸ்கிரிப்டிங் வகைகளுக்கு இந்த RoR ஒரு மாற்று எனலாம்.வேகமான செயல்பாடு,எளிதான ஸ்கிரிப்டிங் என்கிறார்கள்.இன்னும் மார்க்கெட்டில் இதெல்லாம் நிரூபிக்கப்பட்டதாக தெரியவில்லை.ஆனாலும் போகப் போக இந்த ஸ்கிரிப்டிங் வகை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ruby on Rails ஆனது இருவற்றால் ஆனது. அதாவது Ruby எனப்படும் object-oriented programming scripting language (OOP) - மற்றும் Rails எனப்படும் open source web framework-ன் கலவையே Ruby on Rails.அதாவது ரயில் இல்லையேல் ரூபி இல்லை. இது டேவிட் கெனிமெர் கான்ஸ் என்பவரால் (David Heinemeier Hanss) உருவாக்கப்பட்டு,இன்று அது open-source project ஆக, rubyonrails.org -ல் காணக் கிடைக்கிறது.

நீங்களே உங்கள் வின்டோஸ் கணிணியில் இதை நிறுவி விளையாடி பார்க்கலாம்.ரூபியுடன் நீங்களும் ரயிலேறி பாருங்கள்.

Windows -க்கான Ruby download link
http://rubyforge.org/frs/?group_id=167&release_id=5246

Rubygems download link
http://rubyforge.org/frs/?group_id=126&release_id=2471

சாம்பிள் ஸ்கிரிப்டுகள்-டூடோரியல்கள்- இங்கே
http://www.hotscripts.com/Ruby_on_Rails/index.html